Ticker

6/recent/ticker-posts

கோத்தாவை கைதுசெய்ய விட­மாட்டேன் என்று கூறு­வ­தற்கு விஜய­தாஸ யார்? : ராஜித

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை கைது செய்ய விட­மாட்டேன் என்று கூறு­வ­தற்கு அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ யார்? அவ்­வாறு கூறு­வ­தற்கு அவ­ருக்கு
என்ன உரிமை உள்­ளது? அவர் அதனை தீர்­மா­னிக்க முடி­யுமா? அப்­ப­டி­யானால் எதற்கு நீதி­மன்றம் இருக்­கின்­றது. நீதி அமைச்சர் இந்த விட­யத்தில் தீர்­மானம் எடுக்க முடி­யுமா? என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார்.


நாட்டின் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கே இவ்­வாறு கூற முடி­யாது. நீதி அமைச்சர் இந்த விட­யத்தில் தீர்­மானம் எடுக்க முடி­யுமா? அப்­ப­டி­யானால் நீதி­மன்ற கட்­ட­மைப்பு இருப்­பதன் அர்த்­த­மென்ன.? இவ்­வாறு விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கூறு­வதன் மூலம் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ளக விசா­ர­ணைக்கு கூறும் தமிழர் தரப்பின் கோரிக்கை நியா­ய­மா­கின்­றது அல்­லவா? எனவும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.
எவன்ட் கார்ட் விவ­காரம் குறித்த கலந்­து­ரை­யா­ட­லின்­போது எதுவும் பேசாத விஜ­ய­தாச ராஜ­பக்ஷ வெளியில் வந்து கருத்து வெளி­யி­டு­வதில் என்ன அர்த்தம்? மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்க்க முடி­யாமல் விஜ­தாச ராஜ­பக்ஷ ஐ.தே.க.வுக்கு கட்சி மாறி­யவர். ஆனால் நாங்கள் மஹிந்­தவை கவிழ்த்தோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,
கேள்வி:- எவன்காட் விவ­காரம் தொடர்பில் புதிய நிலைமை என்ன?
பதில்:- அது உங்கள் அனை­வ­ருக்கும் தெரிந்த விடயம் தானேஇ அதா­வது எவன்காட் நிறு­வ­னத்தின் செயற்­பா­டுகள் அனைத்­தையும் கடைப்­ப­டையின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இது தொடர்பில் விரி­வான விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தற்கு பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்ற விசேட கூட்­டத்­தி­லேயே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இந்தக் கூட்­டத்தில் பாது­காப்புத் தரப்­பினர் அமைச்­சர்கள் என அனை­வரும் கலந்து கொண்­டனர். இதன் போது எவன்காட் விவ­காரம் தொடர்பில் முழு­மை­யான விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.
கேள்வி:- இவ்­வாறு கடற்­ப­டை­யி­ன­ருக்குஇ எவன்காட் நிறு­வன செயற்­பா­டு­களை வழங்­க­வில்­லை­யென அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கூறி­யுள்­ளாரே?
 
பதில்:- விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ எவ்­வாறு இதனை கூற­மு­டியும். அவர் இந்தக் கூட்­டத்தில் எந்­த­வொரு கருத்­தையும் வெளி­யி­ட­வில்­லையே? அப்­ப­டி­யாயின் கலந்­து­ரை­யா­டலின் போது அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்­க­லாமே? கலந்­து­ரை­யா­டலின் போது எத­னையும் கூறாமல் வெளியில் வந்து இவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யி­டு­வது அர்த்­த­மில்­லை­தானே. அவர் எப்­படி இந்த விட­யத்தை வெளியில் கூற முடியும்?
கேள்வி:- கட்சி மாறி பயந்­து­கொண்டு செயற்­பட முடி­யாது என்று விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கூறி­யுள்­ளாரே?
பதில்:- விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவும் கட்சி மாறி­ய­வர்­தானேஇ அவர் தானே முதலில் ஐ.தே.க.வுக்கு தாவினார். மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்க்க முடி­யாமல் ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்­ட­வர்தான் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ. அன்று அவர்­க­ளினால் மஹிந்­தவின் அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­ய­வில்லை. ஆனால் நாங்கள் கவிழ்த்தோம். ஆனால் எங்­க­ளுக்கு முன்­னரே விஜ­ய­தாச கட்சி மாறி­விட்டார். அவர் எங்­களைப் பற்றி பேச முடி­யாது.
கேள்வி:- ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் ஏன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்து கொள்­ள­வில்லை. ?
பதில்:- பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் கூட்­டத்தில் கலந்து கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. ஆனால் அலரி மாளி­கையில் இடம் பெற்ற முக்­கிய நிகழ்வு கார­ண­மாக பிர­தமர் வர­வில்லை. எனினும் அலரி மாளிகை நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஜனா­தி­பதி தலை­மை­யி­லான விசேட கூட்­டத்தில் கலந்து கொண்டார். இந்­நி­லையில் நாங்கள் ஜனா­தி­பதி தலை­மையில் கூட்­டத்தை நடத்தி தீர்­மா­னங்­களை எடுத்தோம்.
கேள்வி:- எவன்காட் விவ­கா­ரத்தை கடற்­ப­டை­யினால் எடுத்து நடத்த முடி­யாது என்று அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ கூறி­யுள்­ளாரே?
பதில்:- இல்லை. கடற்­ப­டை­யி­னரால் அதனை எடுத்து நடத்த முடியும். ஏற்­க­னவே கடற்­ப­டை­யினர் தான் இந்த நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்­டனர். இடை­ந­டு­வில்தான் எவன்காட் நிறு­வனம் வந்­தது. எனவே கடற்­ப­டை­யினால் செய்ய முடியும். அத்­துடன் கடற்­படை தள­ப­தியும் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லின்­போது நீண்ட விளக்­கத்தை அளித்தார். சட்­டமா அதி­பரின் சார்­பாக வந்த பிர­தி­நி­தியும் இவ்­வாறு கடற்­ப­டையின் கீழ் கொண்டு செல்­வது சிறந்­தது என்று கூறினார்.
கேள்வி:- எவன்காட் தொடர்­பாக நடை­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது உங்­களின் பேச்சை ஒருவர் ஒலிப்­ப­திவு செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. அவர் யார்?
பதில்:- நீங்கள் ஊட­க­வி­ய­லா­ளர்கள் புல­னாய்வு செய்து அதனை கண்­டு­பி­டி­யுங்கள்.
கேள்வி:- ஊட­க­மொன்றும் இத­னுடன் தொடர்பு பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றதே ?
பதில்:- செய்­தி­களை பார்க்கும் போது அவ்­வாறு தோன்­று­கி­றது.
கேள்வி:- மாலை­தீவில் இடம் பெற்ற வெடிப்பு சம்­ப­வத்­துடன் எவன்காட் விவ­காரம் தொடர்பு படு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் விசேட கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டதா?
பதில்:- இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. உண்­மையில் இந்த ஆயு­தக்­கப்பல் கொழும்பு துறை­மு­கத்­திற்கு வரு­வ­தற்­கா­கவே அனு­மதி பெறப்­பட்­டது. ஆனால் கப்பல் காலித் துறை­மு­கத்­திற்கு வந்­தது. இந்த கப்­பலில் இருந்த கெப்டன் யார் என இலங்கை தரப்பில் கோரப்­பட்­ட­போது இலங்­கையர் ஒரு­வரின் பெயர் கூறப்­பட்­டது. கப்­பலில் இருந்த ஆயு­தங்கள் தொடர்­பிலும்இ தவ­றான தக­வல்கள் வழங்­கப்­பட்­டன. எனினும் கப்­பலில் சென்று பார்த்­த­போது 550 ரி. 56 ரக துப்­பாக்­கிகள் உட்­பட 816 ஆயு­தங்கள் அதில் இருந்­தன. அது மட்­டு­மன்றி மாலைத்­தீவு கடற்­ப­ரப்பின் ஊடாக இந்த கப்பல் வந்­த­போது அதன் ஜி. பி.எஸ். இயந்­திரம் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த சந்­தர்ப்­பத்தில் தான் மாலை­தீவு அசம்­பா­விதம் இடம் பெற்­றுள்­ளது.
எக்­கா­ரணம் கொண்டும் கப்­பலில் ஜி.பி.எஸ். இயந்­தி­ரத்தை நிறுத்த முடி­யாது என்­பதை கடற்­படைத் தள­ப­தியும் கூறி­யுள்ளார். மேலும் ஒரு துறை­மு­கத்­தி­லி­ருந்து இன்­னொரு துறை­மு­கத்­திற்கு கப்பல் புறப்­படும் போது சென்­ற­டையும் துறை­மு­கத்­திடம் அனு­மதி பெற­வேண்டும். இந்த எவன்காட் கப்பல் விவ­கா­ரத்தில் அந்த அனு­ம­தியும் பெறப்­ப­ட­வில்லை. அது­மட்­டு­மன்றி கப்­பலில் காணப்­ப­டு­கின்ற ஆயு­தங்கள் தொடர்­பா­கவும் உரிய பதி­வுகள் இல்லை. அதனால் தான் பாது­காப்பு அமைச்சு இந்த விட­யத்தில் தவறு செய்­துள்­ள­தாக நாங்கள் கூறு­கிறோம்.
அப்­போது பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே இதற்­கான உத்­த­ரவை வழங்­கி­யுள்ளார். எனவே தான் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தவ­றி­ழைத்­துள்­ள­தாக கூறு­கின்றோம். சுமார் 3000 ஆயு­தங்­க­ளுக்கு உரிய பதி­வுகள் இல்லை. மேலும் அனு­ம­திப்­பத்­தி­ரங்­களும் பெறப்­ப­ட­வில்லை. ரக்னா லங்கா நிறு­வ­னத்­திற்கு அனு­ம­திப்­பத்­திரம் பெறாமல் ஆயு­தங்­களை வழங்­கலாம். ஆனால் எவன்காட் நிறு­வ­னத்­திற்கு ஆயு­தங்­களை வழங்கும் போது அனு­மதி பத்­திரம் பெற­வேண்டும். இங்கு அவ்­வா­றான அனு­ம­தியும் பெற­வில்லை. மேலும் 43 ஆயு­தங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் தான் இவை தொடர்பில் விரி­வான விசா­ரணை நடத்­து­மாறு ஜனா­தி­பதி பணித்­துள்ளார்.
கேள்வி:- தவ­றுகள் இருப்பின் திலக் மாரப்­ப­னவும், விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவும் ஏன் இந்த விட­யத்தை பாது­காக்க முற்­பட்­டனர் ?
பதில்:- அதனை அவர்­க­ளிடம் தான் கேட்­க­வேண்டும். இவ்­வாறு பேசு­கின்­ற­வர்கள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்­டத்தின் போது எத­னையும் கூற­வில்லை. ஊட­கங்­க­ளுக்கு அறிக்­கை­களை விடுப்­பதில் மாத்­திரம் பல­னில்லை. உரிய இடத்தில் உரிய கருத்தை வெளி­யி­ட­வேண்டும் என்­பதே அவ­சி­ய­மாகும்.
கேள்வி:- அமைச்சர் ஹரீன் பெர்­னாண்­டோவும் உங்­களின் கூற்றை எதிர்த்­தி­ருந்­தாரே?
பதில்:- அவரின் அர­சியல் அறிவு அவ்­வ­ள­வுதான். இவர்­களைப் போன்­ற­வர்­களும் அவ்­வப்­போது அர­சி­ய­லுக்கு வரு­வ­துண்டு.
கேள்வி:- கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது பண்ண விட­மாட்டோம் என்று அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கூறி­யுள்­ளாரே?
பதில்:- முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்ய விட­மாட்டோம் என்று கூறு­வ­தற்கு அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ யார்? அவ்­வாறு கூறு­வ­தற்கு அவ­ருக்கு என்ன உரிமை உள்­ளது? அவர் அதனை தீர்­மா­னிக்க முடி­யுமா? அப்­ப­டி­யானால் எதற்கு நீதி­மன்றம் இருக்­கின்­றது. நாட்டின் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கே இவ்­வாறு கூற முடி­யாது. நீதி அமைச்சர் இந்த விட­யத்தில் தீர்­மானம் எடுக்க முடி­யுமா?
அப்­ப­டி­யானால் நீதி­மன்ற கட்­ட­மைப்பு இருப்­பதன் அர்த்­த­மென்ன.? இவ்­வாறு விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கூறு­வதன் மூலம் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ளக விசா­ர­ணைக்கு கூறும் தமிழர் தரப்பின் கோரிக்கை நியா­ய­மா­கின்­றது அல்­லவா? அதா­வது இவ்­வாறு அமைச்­சர்கள் நீதி விட­யங்கள் குறித்து தீர்­மானம் எடுக்க முடி­யு­மாயின் உள்­ளக விசா­ர­ணைக்கு வெளி­நாட்டு நீதி­ப­திகள் அவ­சியம் என்ற கருத்து வலுப்­பெறும் சாத்­தியம் உள்­ளது.
கேள்வி:- முன்னர் முன்னாள் பாது­காப்பு செய­லாளார் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை பாராட்­டி­ய­வர்கள் இப்­போது தூஷிப்­ப­தாக உங்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?
பதில்:- அப்­ப­டி­யாயின் முன்னர் முன்னாள் பாது­காப்பு செய­லாளார் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை தூஷித்­த­வர்கள் இப்­போது காப்­பாற்ற முய­லு­கின்­ற­னரே.? நான் அர­சாங்­கத்தில் இருக்கும் போது கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை விமர்­சித்­தவன். யுத்தம் செய்த கோத்­த­பாய ராஜ­பக்ஷ சிறந்த மனிதர். ஆனால் யுத்­தத்தின் பின்னர் செயற்­பட்ட கோத்­த­பாய ராஜ­பக்ஷ தவ­று­களை இழைத்தார். இதனை நான் முன்­னரே அச்­ச­மின்றி கூறி­யவன். பலர் அவ­ருக்கு எதி­ராக எத­னையும் கூறாமல் இருந்த காலத்தில் நான் அதனை பகி­ரங்­க­மாக கூறி­யவன். நான் பயப்­ப­ட­வில்லை.
கேள்வி:- இவ்­வா­றான பின்­ன­ணியில் தற்­போ­தைய நிலை­மையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ என்ன நிலைப்­பாட்டில் இருக்­கின்றார்.
பதில்:- கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஒரு புத்­தி­சாலி, எனவே அவ­ருக்கு உண்மை தெரிந்­ததால் அவர் மௌன­மாக இருக்­கின்றார். ராஜ­பக்ஷ மார்­களில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஒரு அறி­வாளி என்­றுதான் கூற­வேண்டும். எது தவறு, எது சரி என்­பது அவ­ருக்கு தெரியும். அவர் மற்­ற­வர்­களை போன்­ற­வ­ரல்ல. எனவே அவ­ருக்கு அனைத்தும் தெரியும்.
கேள்வி;- எக்­னெ­லி­கொட விவ­கா­ரத்­தையும், இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி அமைச்சர் ஒருவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தாரே?
பதில்:- எக்­னெ­லி­கொட மற்றும் ரவிராஜ் விவ­கா­ரத்தில் ஆறு இரா­ணுவ வீரர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு உரிய ஆயு­தங்கள் வேறு சில­ரி­ட­மி­ருந்­ததே இந்த இரா­ணுவ அதி­கா­ரிகள் கைதுக்கு கார­ண­மாகும். இந்­நி­லையில் ஆறு ஆயு­தங்கள் அனு­ம­தி­யின்றி வேறு சில­ரி­ட­மி­ருந்­த­மைக்கு இரா­ணுவ வீரர்கள் கைது செய்­யப்­ப­டு­வார்­க­ளாயின் 3000 ஆயு­தங்கள் அனு­ம­தி­யின்றி விநி­யோ­கித்­த­வர்கள் சுதந்­தி­ர­மாக இருக்க முடியுமா? இது தவறுதானே! அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமல்லவா? இவற்றுக்கான உத்தரவைப் பிறப்பித்தவர் தவறு செய்துள்ளார் தானே. ? அப்படி பார்க்கும்போது இதற்கான உத்தரவை பிறப்பித்தவர் தவறு இழைத்துள்ளார் தானே? அதனை மறைக்க முடியுமா? அப்படி பார்க்கும்போது அக்காலத்தில் இதற்கான உத்தரவை முன்னாள் பாதுகாப்பு செயலாளரே விடுத்திருக்கவேண்டும். அதனால்தான் கோத்தபாய ராஜபக்ஷ தவறிழைத்துள்ளதாக நாங்கள் கூறுகின்றோம்.
எனவே தான் அரசாங்கம் மாறினாலும், அரசு இன்னும் மாறவில்லையென நான் அடிக்கடி கூறுகின்றேன். இப்பொழுதுதான் அரசையும் மாற்றிவருகிறோம். நேற்றிரவு (நேற்று முன்தினம் இரவு) அரசை குறிப்பிடத்தக்களவு மாற்றியிருக்கிறோம்.
கேள்வி:- இவ்வாறு பாரிய தவறுகள் எவன்காட் விவகாரத்தில் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அந்த விவகாரத்தை பாதுகாப்பதற்கு இரண்டு அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு எதிராக என்னசெய்யப் போகின்றீர்கள் ?
பதில்: அதனை ஊடகங்களே பார்க்கவேண்டும் நாங்கள் விமர்சனம் செய்து விட்டு இருந்து விடுவோம். ஊடகங்களே அதனை கிளரவேண்டும்.
virakesari.lk

Post a Comment

0 Comments