Ticker

6/recent/ticker-posts

கோட்டாபய கைது செய்யப்படலாம் : ராஜித

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மிதக்கும் ஆயுத களஞ்சிய சாலை தொடர்பில் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார். ஆயுத களஞ்சிய சாலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையினை வைத்து அவரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் அரசாங்கத்துக்குள் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர்கள் தமது நிலைப்பாடுகளை தெரிவித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments