Ticker

6/recent/ticker-posts

சேயாவின் தந்தையையும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி

கொடதெனியா பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் தந்தையை மரபணு பரிசோதனைக்கு (DNA Test) உட்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

குறித்த பரிசோதனைக்கு இவர் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
முன்னதாக இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 17 வயது மாணவன், கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவரின் பரிசோதனை அறிக்கைகளும் குறித்த குற்றத்துடன் ஒத்துப் போகவில்லை. 

இதனையடுத்து 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபரான கொண்டைய்யா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த வழக்கில் கைதான கொண்டைய்யாவின் சகோதரரும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

இதேவேளை கொண்டைய்யா மற்றும் அவரது சகோதரரும் குற்றத்தை தனே செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments