Ticker

6/recent/ticker-posts

கூகுள் டூடுல்: கவ்வாலி பாடகர் நுஸ்ரத் பதே அலி கானுக்கு மரியாதை!

கவ்வாலி பாடகரான நுஸ்ரத் பதே அலி கானின் 67-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது மரியாதை செலுத்தும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தை வடிவமைத்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான நுஸ்ரத் பதே அலி கான், 1948-ம் ஆண்டு லைலாபூரில் பிறந்தார்.
பழமையான இசையாக கருதப்படும், சூபிக்களின் பக்திப் பாடல்களின் வடிவான கவ்வாலியை பாடுவதில் தேர்ந்தவர். 

கவ்வாலியை சர்வதேச அளவில் பரப்பி, பெருமை சேர்த்தவர் நுஸ்ரத் பதே அலி கான்.

இந்தி திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார்.

தனது 48 வது வயதில், 1997 ஆம் ஆண்டு அலி கான் மரணமடைந்தார்.

இவர் ரசிகர்களால் கவ்வாலியின் மன்னர்களுக்கெல்லாம் மன்னர் என்று புகழப்பெற்றவர்.
ns7.tv

Post a Comment

0 Comments