Ticker

6/recent/ticker-posts

ஐ.எஸ்.ஐ. எஸ். அமைப்பில் 7 இலங்கையர்கள் ?

முகம்மட் மூசின் நிலாம் எனும் பெயரையுடைய 37 வயது கராட்டே ஆசிரியர்
இலங்கையை முஸ்லிம்கள் 7 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ்.  பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளதென சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது. மேற்படி செய்தியை தமிழ்வின் இணையதளம் செய்திவெளியிட்டிருப்பதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டள்ளது.  இவர்கள் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 7 முஸ்லிம்களே இந்த பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

முகம்மட் மூசின் நிலாம் எனும் பெயரையுடைய 37 வயது கராட்டே ஆசிரியர் ஏற்கனவே இந்த பயங்கரவாத அமைப்புடன் இணைந்து போராடி உயிரிழந்துள்ளார். இவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பின்னர் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்து இன்றைய முக்கிய சிங்கள நாளிதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   

Post a Comment

0 Comments