Ticker

6/recent/ticker-posts

என்னுடைய ஆருயிர் சகோதரரை இழந்து தவிக்கிறேன்... இசைமுரசு ஹனீபா மரணம் குறித்து கருணாநிதி வேதனை

பிரபல பாடகர் ஹனீபாவின் மரணத்தால் ஆருயிர் சகோதர் சகோதரரை இழந்து தவிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைபாடு காரணமாக பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 96.

பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடத் தொடங்கிய ஹனிபா, ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியும், இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். திமுகவின் பிரச்சார பீரங்கியாக வலம் வந்தவர் ஹனீபா. சமீபகாலமாக உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த ஹனீபா,  சென்னையில் தனது இல்லத்தில் காலாமானார். மறைந்த ஹனீபாவின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், ஹனீபாவின் இழப்பு குறித்து கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நாகூர் ஹனிபாவின் மறைவு எண்ணிப் பார்க்க இயலாத பேரிழப்பு. நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இல்லாத தி.மு.க மாநாடே இல்லை என்று கூறும் அளவிற்கு அவரது பங்கு அளப்பரியது. என்றென்றும் கூடவே இருந்த நல்ல நண்பரை இழந்து விட்டோம். என்னுடைய ஆருயிர் சகோதரரை இழந்து தவிக்கிறேன். நீங்கள் சிந்துகின்ற கண்ணீரோடு என்னுடைய கண்ணீரையும் கலந்து, அவருடைய புகழ் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டும், வாழவேண்டும், வாழ்க ஹனிபா அவர்களின் புகழ்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

1 Comments

  1. இசை முரசு அல்ஹாஜ் நாகூர் ஈ.எம். ஹனீஃபா வஃபாத்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!

    https://www.facebook.com/q8tic/posts/872567636150406

    குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (10.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

    நன்றி! வஸ்ஸலாம்.

    அன்புடன்....

    மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ - தலைவர்

    மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்

    மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

    ------------------------------------------------------------------------------------------------------
    தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
    குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
    குவைத்.

    துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82
    மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com
    இணையதளம்: www.k-tic.com
    யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
    முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
    முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
    நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live
    ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

    ReplyDelete