Ticker

6/recent/ticker-posts

டயாலிசிஸ் வசதியில்லாமல் மரணத்தின் விளிம்பில் நோயாளிகள்..!


“குலியாபிட்டிய, கல்கமுவ பொது வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் டயாலிசிஸ் செய்வதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதனால்தான் இன்று மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இது சுகாதார அமைச்சின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையாகும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று (ஜூலை 5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“டெண்டர் கோரப்பட்ட அனைத்தும் பெரும் நெருக்கடியில் உள்ளன. மாதக்கணக்கில் இப்படித்தான். இது ஒரு பெரிய பிரச்சனை. எனவே சுகாதார அமைச்சர் என்ற வகையில் நீங்கள் இதில் எப்படி தலையிடுவீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.”

“பொதுவாக சுகாதார அமைச்சுக்கு சுமார் 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. இதனால் தற்போது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்தத்தை பரிமாறிக்கொள்ள முடியாமல் இன்று அனாதரவாக உள்ளனர். அதற்கு தேவையான உபகரணங்கள் இல்லை. வெளியில் இருந்து எடுத்து வரச் சொல்கிறார்கள். வெளியில் கொண்டு வர அந்த மக்களிடம் பணம் இல்லை. தயவு செய்து இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர்  தேடிப்பாருங்கள், இது ஒரு பெரிய பிரச்சினை.”

சுகாதார அமைச்சின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Post a Comment

0 Comments