Ticker

6/recent/ticker-posts

முன்னாள் ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை!


முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல்லா யாமீனுக்கு மாலைதீவின் குற்றவியல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் யமீன், 2023ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்தாா். இந்த தீா்ப்பால் அந்த வாய்ப்பை இழக்க நேரிடும்.

குற்றப்பத்திரிகை 19 ஆண்டு சிறைத்தண்டனை கோரியிருந்தது. அதில், எட்டு ஆண்டுகள் லஞ்சம் வாங்கியதற்காகவும், 11 ஆண்டுகள் பணமோசடி குற்றத்திற்காகவும் என கோரியிருந்தது. என்றாலும் தலைமை நீதிபதி அகமது ஷகீல் அவருக்கு லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டுகளும், பணமோசடி வழக்கில் 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்தார். 5 மில்லியன் அமொிக்க டொலரும் அபராதமாக விதிக்கப்பட்டது.

தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யமீனின் வழக்கறிஞர் குழு,  தாமதமின்றி குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம், மேல்முறையீட்டு நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளது.

முன்னதாக 2019 ஆம் ஆண்டில், நாட்டின் குற்றவியல் நீதிமன்றத்தில் இதேபோன்ற வரி வழக்கு யாமீனுக்கு எதிராக விசாரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தண்டனையை ரத்து செய்து யமீனை விடுதலை செய்தது.

Post a Comment

0 Comments