Ticker

6/recent/ticker-posts

தன்னை புரட்சியாளன் எனக்கூறும் ஹசன்அலி, முஸ்லிம் தலைமைகளுக்கு விடுத்துள்ள சவால்

முஸ்லிம் அரசியல் தலைமைகள்  முடிந்தால், நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து அரசியல் செய்து காட்ட வேண்டுமெனத் தெரிவித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். ரி. ஹசன் அலி,  அதுவே முஸ்லிம் மக்களின்  விருப்பமாக உள்ளதெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர்   புதன்கிழமை (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் சமூகத்தின்  தலைவர் அஷ்ரப் நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து இருந்துதான் முதன்முதல் அரசியல் செய்தார். எதிர்ப்பு அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவரின் அக்கால பகுதி அமைந்து நின்றது. அக்கால பகுதியில் அவர் 118 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார்.

அமைச்சராக அவர் பதவி வகித்த காலங்களில் மொத்தமாக 05 மணித்தி யாலங்கள் வரைதான்  நாடாளுமன்றத்தில் பேசினார் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. அவர் நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து இருந்து அரசியல் செய்த காலத்தில் பெற்று கொடுத்த நன்மைகள் என்றென்றைக்குமே மகத்தானவை.

அவற்றில் குறிப்பிட்டு சொல்லதக்க ஒன்றுதான் விகிதாசார தேர்தலில் வெட்டு புள்ளியாக இருந்து வந்த 121/ 2 வீதத்தை 05 சதவீதமாக குறைத்தார். அதன் நன்மைகளை தான் ஜே. வி. பி அடங்கலாக சிறுபான்மை கட்சிகள் இன்றும் அனுபவிக்க முடிகின்றது.

அரசாங்கத்தில் அதிகாரம் மிக்க அமைச்சு பதவிகளை வகித்த எம்.எச்.எம். அஷ்ரப், அரசாங்க தரப்பில் இருந்து அரசியல் செய்வது இறுதி காலத்தில் கட்சி போராளிகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் தூர விலகி இருப்பதை உணர்ந்தார்.

அதனால், இனி மேல் எதிர்த்தரப்பில் இருந்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். ஆயினும்  அதற்கு பின்  எதிர்பாராத வகையில் மரணித்துவிட்டார். அவருடன் அந்த இறுதி ஆசையும் நிறைவேறாமலேயே போய் விட்டது.

 ஆகவே இவர்கள் சொல்லிக் காட்டிய சம்பவங்கள் மீது இவர்களுக்கும் நிச்சயம் பங்கு, பொறுப்பு ஆகியன இருக்கவே செய்கின்றன.

இவர்கள் அவற்றில் இருந்து தப்பிக்க முடியாது. இவர்கள் அமைச்சு பதவிகளை அப்போது தூக்கி எறிந்து இருந்தால் வேறு விடயம். இவற்றை சொல்வதற்கான அருகதை நிச்சயம் எனக்கு இருக்கின்றது.

ஏனென்றால் நான் நாடாளுமன்றத்தில் எப்போதும் ஒரு போராளியாகவே, புரட்சியாளனாகவே செயற்பட்டு வந்திருக்கின்றேன். அதை ராஜபக்‌ஷ சகோதரர்களும் மிக நன்றாகவே அறிவார்கள். என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments