Ticker

6/recent/ticker-posts

கோத்தாபயவுக்கு ஆப்பு?

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதில் சட்டரீதியாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. 
 கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு இன்று மாலை தீா்ப்பு வழங்கப்படவிருக்கிறது.
 
இந்த தொடர்பாக சகல தரப்பினரும் தங்களது ஆவணங்களை இன்று பிற்பகல் 3.15 க்கு முன்னர் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது
 
கோத்தாபய ராஜபக்ஷ முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்நாட்டில் வௌிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதன் காரணமாக குறித்த அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றினை வௌியிடுமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளனர்.
 
பெரும்பாலும் இன்று மாலைக்குள் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது கோத்தாபயவுக்கு பாதமாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments