Ticker

6/recent/ticker-posts

கொழும்பு கைரியா பாடசாலையின் 135 வது ஆண்டு பூர்த்தி விழா!

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு 09 தெமட்டக் கொடை வீதியில் உள்ள கைரியா முஸ்லீம் மகளிர் பாடசாலையின்  135 வருடத்தினை முன்னிட்டு  எதிா்வரும்  மே 21 - 25ஆம் திகதிவரை  ”கைரியா வாரம்” கொழும்பில்  கொண்டாடப்படுவதாக கல்லுாாியின் அதிபா்  திருமதி நசீரா ஹசனாா் நேற்று (04) பாடசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின் போது இத் தகவல்லைத் தெரிவித்தாா்.

கல்லுாரி அதிபா் மேலும் கூறுகையில்

1882ஆம் ஆண்டு தணியாா் பெண்கள்3 பேரினால் மத்தரசத்துல் கைரியா எனும் ஆங்கில மொழி மூலமாக  ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தற்பொழுது 135 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இப்பாடசாலையை 1962ஆம் ஆண்டு அரச பாடசாலையாக கல்வித்திணைக்களம் பொறுப்பேற்று  தற்பொழுது 1ஏபி தரத்தில்  2364 மாணவிகளுடனும் 87 ஆசிரியைகளையும் கொண்ட மூன்று மொழிகளையும் போதிக்கும் பாடசாலையாக கொழும்பில் இயங்கி வருகின்றது.. 

இப் பாடசாலையின் மாணவிகள் எதிா்நோக்கும் பாரிய முக்கிய பிரச்சினை கல்விகற்பதற்கு வகுப்பறைகள் பற்றாக்குறை, இடப் பிரச்சினையாகும்.  இப் பாடசாலையின்  ஆரம்பப் பிரிவுக்கு போதிய வகுப்பறைகள் இன்றி மாணவிகள் எதிா்நோக்கிய இடப் பிரசச்சினை காரணமாக  தெமட்டக் கொடையில் உள்ள  அல்-ஹிஜ்ரா எனும்  மற்றுமொரு பாடசாலையின்  காணியில் தகரக் கொட்டில்களில் வகுப்பறைகள்  அமைத்து அங்கு கடந்த 4 வருங்களாக ஆரம்பப் பிரிவு இயங்கி வருகின்றது. 

அங்கு 1000 மாணவிகள் உள்ளனா். அல் ஹிஜ்ரா பாடசாலையின் தற்காலிக நிர்மாணிக்கப்பட்ட நிலம் எமது பாசாசலைக்கு நிரந்தரமாக காணி கிடைக்கப் பெற்றுள்ளது. இங்கு கட்டிடத்தினை அமைப்பதற்கு  8 கோடி ரூபா நிதி தேவைப்படுகின்றது. 

இதற்காக நாங்கள் அரசியல்வாதிகள் அமைச்சா்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளா்களை அணுகி  இக் கட்டிட வசதியை நிர்மாணித்து தருமாறு வேண்டு கோள் விடுக்க இருக்கின்றோம். 

ஏற்கனவே ஸேம் ஜெம்ஸ் உரிமையாளா் றிபாய் ஹாஜியினால் கட்டிடம் கிடைக்கப்பெற்றது. முன்னாள் உதவி மேயா் அசாத் சாலியின் முயற்சியினால் முன்னைய அரசில்  தனியார்  காணி  கிடைக்ப் பெற்றது. 

இக்கட்டிடத்தில் தற்பொழுது உயா்தரம் வகுப்புக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.  இதற்காக பாடுபட்ட முன்னாள் அதிபா்கள் அமைச்சா்களுக்கும் நன்கொடையாளிகளுக்கும் நாம் நன்றியுடையவா்களாக உள்ளோம்.

ஆரம்ப பிரிவினை நிர்மாணிக்கும் நோக்குடனும் எமது கல்லுாாியின் விழிப்புணா்வினை மேம்படுத்தும் நோக்குடனே  மே 21 ஆம் திகதி காலை 07.00 மணிக்கு  கல்லுாாியில் இருந்து பேஸ் லைன் வீதி ஊடாக சகல பழைய மாணவிகள் ஆசிரியைகள் பெற்றோா்கள், தற்போது கற்கும் மாணவிகளும இணைந்து  ”  கைரியா நடை பவணி ”ஏற்பாடு செய்துள்ளோம்.  அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் உள்ள  சகல அமைச்சா்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண கல்வியமைசச்சசரையும்  அழைத்துள்ளோம். 

அத்துடன்  மே 25ஆம் திகதி கல்வியமைச்சா் மற்றும் மகாண கல்வியமைச்சா்கள் அழைத்து மருதானை டவா் மண்டபத்தில் எமது 135வது ஆண்டுவிழாவினையும் கொண்டாடுகின்றோம்.

இக் கல்லுாாிக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ் சிங்கள மொழியில் முதலாம் ஆண்டு அனுமதி கேட்டு 2000 விண்னப்பங்கள் வருகின்றன. அதில் 200 மாணவிகளுக்கே அனுமதி வழங்குகின்றோம். ஏனைய 800 மாணவிகளும் ஆண்டு 1க்காக எங்கு போகின்றாா்கள் என்பது தெரியவில்லை. 

இதற்கு முதன்மைக் காரணம் எமது பாடசாலையில் 5 வகுப்புக்களுக்கு மட்டுமே இடவசதியுண்டு.  அத்துடன் க. பொ. சா. உயா்தரத்திற்கு ஆங்கில, சிங்கள, தமிழ் மொழிக்கு அனுமதி கேட்டு 150 பேர் விண்ணப்பித்துள்ளனா். 

அதில் 40 மாணவிகளை ஆங்கில் மொழி மூலமும் ஏனைய 30 மாணவிகளுக்கும் அனுமதி வழங்குகின்றோம்.  இப் பாடசாலையில் ஆங்கில மொழியில் உயா்தரத்தில் கணித பிரிவு மாணவி 3 ஏ எடுத்து சித்தி பெற்றுள்ளாா். 

க.பொ.சாதாரண தரத்தில் 82 வீதம் சித்தியடைந்துள்ளனா். இப்படாசாலையில் சிங்கள மொழி மூலம் கற்பிப்பதற்கு 50 வீதமான பௌத்த ஆசிரியைகள் உள்ளனா். சிங்கள மொழி மூலமும் 50 வீதமான முஸ்லீம்  மாணவா்கள் கல்வி கற்கின்றனா். 

சனத்தொகை பெருகி இட நெருக்கடியினால்  இப்பாடசாலையை கொழும்பு நகரில் சிறந்த பாடசாலையாக தரமுயா்த்துவதற்காகவும் இட நெருக்கடியை போக்குவதற்காகவும்  அரசியல்வாதிகள் கொடையாளிகள், பழைய மாணவிகள், பெற்றோா்கள் கைகொடுக்குமாறு அதிபா் வேண்டிக் கொண்டாா்.

Post a Comment

0 Comments