Ticker

6/recent/ticker-posts

கவிதை - அதிசய பிறவிகள்!

அதிசய பிறவிகள்

கெண்டை நனையும்
நீருக்குள்ளே
நீந்திக்காட்டும்
விஞ்ஞானிகள்

அந்நாந்து பார்க்கும்
நிலாப் பெண்ணை
உள்ளங்கையில்
ரசிக்கத் தரும்
ஆழுமைகள்


ஒழுக்க நதியில்
முழுக்க மூழ்கி
முத்துக்கள் பெறவைக்கும்
முன்னுதாரண புருசர்கள்

தரமான தலைவர்களை
தாரகையாய் மின்னவைக்கும்
நீல வானங்கள்

கல்விக்காய்
கால் கடுக்க நின்று
வெண்கட்;டிகளின் துகள்களால்
சுவாசப்பையை நிரப்பி
தன் சட்டைப் பையை
தவறவிட்ட தங்கங்கள்

கனிகளை மட்டும்
காணிக்கையாய் கொடுத்து
கனவுகளை மறந்து
மாணவனுக்காய் மலரும்
மகத்துவ மலர்கள்

வாழ்ககைப் பயணத்தில்
வழுக்கி விழாமல்
பச்சைக் கரையை
பார்க்க வைக்கும்
உயிர்கொண்ட ஓடங்கள்

அறியாமை இருளகற்றி
அறிவொளியில்
அகிலத்தை அலங்;கரிக்கும்
சூரியன்கள்

ஊரை உலகறிய
முகவரி கொடுக்கும்
முயற்சியாளர்களை
பெற்றெடுக்கும் மற்றொரு
தவத் தாய்மார்கள்

மருத்துவர்கள்
பொறியியலாளர்கள்
கல்வியியலாளர்கள்
கனவான்கள்
கௌரவர்கள்
நற்பிரஜைகள்
நல்லோர்கள் எல்லோரும்
நல்லாசானின் மூளை
பொறிகளுக்குள் மீண்டும்
பிறக்கிறார்கள்
ஆசானின் மக்களாய்

என்
இரண்டாம் பெற்றோர்களே
கௌரவர்களே கனவான்களே
பால் நிலாக்களே

ஆரோக்கியம் அனைத்தும் பெற்று
காற்று வாழும் வரை
நீங்கள் வாழ்ந்திரிக்க என்
இதயத்தின் ஆளத்திலிருந்து
வாழ்த்துமலர்களை
வாரி வழங்குகின்றேன் அது
காற்றலைகளோடு கலந்து
உங்கள் முன்
முளந்தாளிட்டு
கூனிக்குறிகி வளைந்து
மலர்ந்து மணம் வீசும் - அதை
முகர்ந்து கொண்டு உங்கள்
சுவாசப்பையில் என்னையும்
பத்திரப்படுத்துங்கள்
பார்போற்றும்
பண்பானவர்களே
பனிப் பூக்களே.

பாலமுனை யு.எல். அலி அஷ்ரஃப் ஆல் சூரி

Post a Comment

0 Comments