Ticker

6/recent/ticker-posts

பலன் தரும் மூலிகை தூதுவளை

தூதுவளை கொடி வகையை சார்ந்த தாவரம். கத்திரி பூ நிறத்தில் பூக்கும். இலைகளிலும், கொடிகளிலும் முட்கள் இருக்கும். வேலிகளில் படர்ந்து வளரும். இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவகுணம் வாய்ந்தது. மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 

காது கேட்கும் திறன் மந்தமாக இருத்தல், காதுவலி, உடல் நமைச்சல், உடல் வலி, விந்து குறைபாடு, சுவாச நோய் போன்றவைகளை குணப்படுத்தும்தன்மை தூதுவளைக்கு இருக்கிறது.


சித்த மருத்துவத்தில் தூதுவளை அதிகம் பயன்படுத்தப்     படுகிறது. சளி, இருமல்,  ஆஸ்துமா மற்றும் காது, தொண்டை நோய்களுக்கு  தூதுவளை சிறந்த மருந்தாகிறது. தூதுவளை உடலுக்கு உறுதியையும்,  சக்தியையும் அளிக்கும் காயகற்ப மூலிகை வகையை சார்ந்தது.

இலைகள் முக்கோண வடிவில் முட்களுடன் காணப்படும். முட்களை கவனமாக சிறு கத்திரிகோல் கொண்டு நீக்கிவிட்டு, பயன்படுத்தவேண்டும். இலைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தூது   வளையில் உள்ள இயற்கையான தாவர  ஊக்கிகள் நோய்க்கு விரைவாக நிவாரணம் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் போன்ற  உள்ளுறுப்புகளை சிறப்பாக இயங்கச் செய்கிறது. நுண்கிருமிகளால் நோய் ஏற்படுவதையும் தடுக் கும். ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளை சூரணம், தூதுவளை நெய், தூதுவளை லேகியம் ஆகியவை இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இவை இருமல், காசநோயை குணமாக்கும். பசியின்மை, காது, தொண்டை நோய்களை போக்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தூதுவளை பழத்தில் உள்ள விதைகளை விதைப்பதன் மூலம் தூதுவளை செடிகள் வளரும். இதை எளிதாக தொட்டிகளில்  வளர்க்கலாம். அதிக பராமரிப்பு தேவையில்லை. 

Post a Comment

0 Comments