Ticker

6/recent/ticker-posts

பேராசிரியர் தாரிக் ரமழான் இலங்கைக்கு விஜயம்

முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கிர் மக்கார் 18ஆவது நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாக்கிர் மாக்கர் சொற்பொழிவில் கலந்துகொள்வதற்காக பேராசிரியர் தாரிக் ரமழான் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் இந்த நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு விசேட சொற்பொழிவு ஒன்றையும் நிகழ்த்தவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. தேசிய ஐக்கியத்துக்கான பாக்கிர் மாகார் நிலையம் ஏற்பாடு செய்துள்ள இன் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 4.15க்கு கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.


அதேவேளை செப்டம்பர் 18 (இன்று) மற்றும் நாளை 19 ஆம் திகதிகளில் இரவு 8 மணிக்கு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் பேராசிரியர் தாரிக் ரமழானின் பகிரங்க சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது. பேராசிரியர் தாரிக் ரமழான் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமகால இஸ்லாமிய கற்கைகள் துறையில் பேராசிரியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவரைப்பற்றி.....
பேராசிரியர் தாரிக் ரமழான் சர்வதேச புகழ் பெற்ற இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவர். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘த டய்மஸ்’ சஞ்சிகையின் தரப்படுத்தலின் படி, அடுத்த நூற்றாண்டை ஆழப்போகும் சிந்தனையாளர்கள் நூறு பேரில் 49 வது இடத்தை தாரிக் ரமழான் பெற்றிறருக்கிறார்.

இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நவீன இஸ்லாமிய சிந்தனை கற்கைகளுக்கான பேராசிரியராகவும், கட்டார் பல்கலைகழகம், மொரக்கோ, டோக்கியோ மற்றும் நெதர்லாந் பல்கலைக்கழகங்களில்’ இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். இன்னும், இஸ்லாமிய சட்டவாக்கம் மற்றும் ஒழுக்கவியலுக்கான நிறுவனத்தில் கலாநிதி யூசுப் அல் கர்ளாவியுடன் இணைந்து தலைமைப் பதவியை வகிக்கிறார்.
அத்துடன், ஜரோப்பிய நாடுகளின் ஓழுக்கவியலுக்கான கூட்டமைப்பின் ஆய்வாளராகவும் செயற்படுகிறார். இமாம் ஹசனுல் பன்னாவின் பேரனான கலாநிதி தாரிக் ரமழான் அவர்கள் , தனது முதுமானிப் பட்டத்தை தத்துவம் மற்றும் பிரான்ஸ் இலக்கியத்திலும், கலாநிதிப் பட்டத்தை அரபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகளிலும் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாப் பல்கலைகழகத்தில் நிறைவு செய்தார். பின்னர், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ் , ஹதீஸ், தப்ஸீர், உலுமுல் குர்ஆன், மகாஸிது சரீஆ போன்ற இஸ்லாமிய சட்டவியல் துறைகளை அல் அஸ்ஹர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் 10 வருடங்களாக கற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கின் இராணுச் சர்வதிகாரங்களை விமர்சித்தன் விளைவாகவும் , பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்திற்கு பணத்தாலும், கருத்தாலும் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு எகிப்து , சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகள் பேராசிரியர் தாரிக் ரமழானுக்கு வீஸா கொடுக்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க அரசும் அவருக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்து அவரின் வருகையை தடை செய்துள்ளது.

பல்லாயிரக்கனக்கான ஆய்வுக் கட்டுரைகள் சொற்பொழிவுகளை ஆங்கிலம் அரபு மற்றும் பிரன்ஸி மொழிகளில் எழுதியும் பேசியும் உள்ள அறிஞர் அவர்கள் சுவிஸர்லாந்தில் 1994 ஆம் ஆண்டு ( (Movement of Swiss Muslims) ) என்ற சுவிஸர்லாந்து முஸ்லிம்களுக்கான இயக்கத்தை நிறுவினார். மேலும் தற்போது European Muslim Network (EMN) என்ற அமைப்பின் தலைவராகவும் காணப்படுகின்றார். My Vision of Western Islam, He Quest for Meaning: Developing a Philosophy of Pluralism, What I Believe,Islam, the West and the Challenges of Modernity என்பன அறிஞர் தாரிக் ரமழான் அவர்களால் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூல்களில் சிலவாகும்.

ஈரானினை தளமாக கொண்டு செயற்படுகின்ற Press TV என்ற தொலை காட்சியில் ‘இஸ்லாம் மற்றும் வாழ்க்கை’ என்ற வாராந்த நிகழ்ச்சியினை இங்கிலாந்தில் இருந்து நேரடியாக நடாத்தி வருகின்றார். உயிர் வாழும் அறிவுப் பாரம்பறியமான அறிஞர் தாரிக் ரமழான் அவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கு முன்னெடுக்கும் அறிவு சார் படையெடுப்பினை முறியடிப்பதில் திறம்பட செயலாற்றுவதில் முன்னணியில் நிற்கிறார்.
நன்றி
Shinas Mansoor

Post a Comment

0 Comments