Ticker

6/recent/ticker-posts

30 வருடங்களின் பின்னர் யாழில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறை! ( படங்கள் )


(mohamed rinsath)

யாழ்ப்பாண றோட்டறிக் கழகமும் (Jaffna rotary Club) துணைக்கழகமான யாழ்.றோட்டறக்ட் கழகம் (Jaffna Rotaract Club) இணைந்து மேற்கொண்ட  இன்ரறக்ட் கழகங்களுக்கான (Interact Club) PET SET பயிற்சிப்பட்டறை (27.09.2015)நேற்று ஞாயிற்றுக்கிழமை தியாகிகள் அறக்கொடை மண்டபத்தில் இடம்பெற்றது.




இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை மாலைதீவு 3220 இன் மாவட்ட ஆளுனர்   றொட்டேரியன் ஜோஜ் யேசுதாசன், சிறப்பு விருந்தினராக DICC   றொட்டேரியன் ஜெறோம், வளவாளர்களாக  இன்ரறக்ட் கழகங்களின்  மாவட்ட பிரதிநிதி DIR தேவியன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், யாழ்ப்பாண றோட்டறிக் கழக உறுப்பினர்கள், யாழ்.றோட்டறக்ட் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் 30 வருடகாலத்தின் பின்னர் நிகழ்ந்த PET SET  பயிற்சியில் வடக்கு- கிழக்கு இன்ரறக்ட் கழக (Interact Club) மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலைகளில் இன்ரறக்கட் கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments