Ticker

6/recent/ticker-posts

பிரபலமான கோத்தாபயவின் அலுவலக அறை! 2022ன் சிறந்த படங்களில் ஒன்று !


உலகப் புகழ்பெற்ற டைம் இதழ், அதன் 2022 இன் சிறந்த 100 புகைப்படங்களில், இந்த ஆண்டு ஜூலை 09 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த போராட்டக்காரர்களால், முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட புகைப்படத்தை சேர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அவரது அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட புகைப்படம், கடந்த  ஜூலை 15 அன்று புகைப்பட பத்திரிகையாளர் அபிஷேக் சின்னப்பா என்பவரால்  எடுக்கப்பட்டது.

TIME சஞ்சிகையின் புகைப்படத் துறையின் இந்த ஆண்டிற்கான சிறந்த 100 படங்கள், அந்த சஞ்சிகையின்  எட்டு நபர்களைக் கொண்ட குழுவால் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவரிசைப்படுத்தப்படாத தேர்வாகும், 

இந்த புகைப்பட தொிவு, “இந்த ஆண்டு உண்மையில் வித்தியாசமானது”, என்பதை படங்களில் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டைம் சஞ்சிகை கூறியுள்ளது.

அனைத்து படங்களையும் இந்த இணைப்பில் காணலாம்!

https://time.com/6234958/top-100-photos-2022/

Post a Comment

0 Comments