Ticker

6/recent/ticker-posts

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா! வுஹானில் “லொக் டவுன்”!


முதலாவது கொவிட் பரவல் ஆரம்பித்து  கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வுஹானின் ஒரு பகுதியை சீனா பூட்டியுள்ளது

மத்திய சீனாவின் வுஹான் முதல் வடமேற்கில் ஜினிங் வரையிலான சீன நகரங்கள் கொவிட்-19 ன் தடைகளை எதிா்கொண்டிருக்கின்றன. பல கட்டிடங்கள் சீல் வைக்கப்படுவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.  

மீண்டும் பரவி வரும் கொவிட் 19ஆபத்தைத்  தடுக்கும் நடவடிக்கைகளால்  மில்லியன் கணக்கான மக்கள் கஷ்டங்களை எதிா்நோக்குவதாகவும் அறிய வருகிறது.

சீனாவில் நேற்றைய தினம்  (27)  நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றுகளை மூன்றாவது நாளாகப் பதிவுசெய்தது.

இது ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான நோயாளா் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஷாங்காய் முழுவதுமாக பூட்டப்பட்ட நிலைக்கு சீனா தள்ளப்பட்டுமா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

வுஹானில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்ட நிலையில், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே செயல்படுகின்றன.
 
சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்ற ஹன்யாங்கிலும், மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

Post a Comment

0 Comments