Ticker

6/recent/ticker-posts

பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணிநேரத்தில் பதவி வேண்டாம் என்ற டீ.வி. சானக்க!


பதவிப் பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சர்  பதவி தனக்கு வேண்டாம் என டீ. வி. சானக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் டீ. வி. சானக்க வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நேற்று (8) பதவிப்பிரமாணம் செய்து கொண்டாா். 

பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்தில் அவா் தனக்கு வழங்கப்பட்ட பதவியை நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பாராளுமன்ற உறுப்பினர் டீ. வி. சானக்க ஜனாதிபதி ரணிலுக்கு இதனை அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் சானக்கவிற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்தவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று (8ஆம் திகதி) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

காஞ்சன விஜேசேகர மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றுகிறாா்.  

Post a Comment

0 Comments