Ticker

6/recent/ticker-posts

வைரலான சவுதி சிறுவனின் புகைப்படம்!


சவுதி அரோபியாவைச் சோ்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மூன்று பைகளை தனது முதுகில் சுமந்து கொண்டு செல்லும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

மிஷால் அல்-ஷஹ்ரானி என்ற இந்தச் சிறுவன் தனது சகோதரிகள் சாரா மற்றும் நூரா ஆகியோரின் பைகளை தனது சொந்த பையுடன் சோ்த்து எடுத்துச் சென்றதைக் கண்ட அவாின் தந்தை ஒரு படத்தை எடுத்து தனது குடும்ப வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளாா்.

குறித்த சிறுவனும் அவனின் சகோதாிகள் இருவரும், சவுதியின் தெற்கு ஆசிர் பிராந்தியத்தில், காமிஸ் முஷெய்த்தில் உள்ள தங்கள் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும்போது, இடம்பெற்ற இந்தக் காட்சி அவர்களின் தந்தையின் கவனத்தை ஈர்த்ததால், அதனைப் படம் பிடித்து பதிவேற்றம் செய்துள்ளாா்.

தந்தையால் பதிவேற்றம் செய்யப்பட்ட  படம் உடனடியாக வைரலாகி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  படத்தை பலரும் விரும்பி “லைக்” செய்து, கருத்திட்டு, பகிர்ந்து வருவதாக Al-Arabiya.net இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்திற்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைப் பற்றி கருத்து தெரிவித்த மிஷால், "நான் எப்போதும் என் குடும்பத்திற்கு, குறிப்பாக என் சகோதரிகள் சாரா மற்றும் நூரா பள்ளியிலிருந்து திரும்பும் போது உதவ விரும்புகிறேன்."

"பைகள் கனமாக இல்லை, என்றாலும்,  நான் கூட்ட நெரிசலிலும் வெப்பமான காலநிலையிலும் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்," என்று அந்தச் சிறுவன் குறிப்பிட்டுள்ளான். அதே நேரம், தனது தந்தை எடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலான பிறகுதான் தனக்குத் தெரியவந்தததாகவும் அவன் கூறியுள்ளான்.

காமிஸ் முஷெய்த் ஆளுநர் மற்றும் ஆசிர் பிராந்தியத்தின் கல்வி இயக்குநரும் சிறுவனின் உன்னத செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

"குழந்தையின் சிறிய வயதிலேயே பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குத் தயார்படுத்துவது  சிறந்த செயற்பாடு" என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆசிர் பிராந்திய கல்வி இயக்குனர் டொக்டர். அஹ்மத் அல்-ஒமரி  "அழகான நிலை, மேலும் அழகான புகைப்படம், சிறந்த அர்த்தத்தை உள்ளடக்கியது என்று கருத்திட்டுள்ளாா்.

"வீடு, பள்ளிக் கூடம் மற்றும் சமூகம் - இதை உருவாக்குவதில் அனைவரும் பங்குதாரர்கள் - இந்த குழந்தையின் செயற்பாடு அத்தகைய அணுகுமுறையை உள்ளடக்கியிருக்கிறது என்றும் அவா் கூறியுள்ளாா்.

Post a Comment

0 Comments