Ticker

6/recent/ticker-posts

பத்ர் நகர பயனாளிகளுக்கு, NFGG கற்றல் உபகரணங்களை வழங்கியது.


அக்கரைப்பற்று பத்ர் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (29.12.2018 சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) அக்கரைப்பற்று செயற்குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, பத்ர் வட்டார வேட்பாளராகப் போட்டியிட்ட ஏ.சீ.எம் நௌபர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது  பத்ர் வட்டாரத்தைச் சேர்ந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இரு மாணவர்களான எச். அப்துல்லாஹ் (பத்ர் வித்தியாலயம்), எஸ்.அன்ஸிப் அஹமட் (அஸ் ஸிராஜ் கனிஷ்ட பாடசாலை) ஆகியோரைப் பாராட்டி  கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. பத்ர் வித்தியாலயத்தில் ஆறு வருடங்களின் பின் ஒரு மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

பிரதம அதிதியாக NFGG தவிசாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.ஏ.பரீட் சேர், அம்பாரை மாவட்ட NFGG செயற்குழுவின் செயலாளர் எம். ஏ. ஷிஹார்டீன், NFGG யின் அக்கரைப்பற்று செயற்குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஐ.எல்.ஷரிப்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான Iconic Youths இளைஞர் கழகத் தலைவர் தில்ஷாத், பத்ர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் அனஸ், றமீஸ், லாபிர் காக்கா ஆகியோரும் அதிதிகளாக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

"பத்ர் நகரில் கல்விக்கான பணிகளை முன்னெடுப்போம்" என தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைப்படுத்தக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments