Ticker

6/recent/ticker-posts

துபாயில் ஐ.சீ.சீ. கிரிக்கெட் அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றி - அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ


( ஐ. ஏ. காதிர் கான் )

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை, ஊழல் மற்றும் மோசடிகள் அற்றதாக, வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு தான் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, துபாயில் தெரிவித்தார்.
   
வியாழக்கிழமை (27) டுபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளைச் சந்தித்த வேளையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு அவர்களிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
   
கடந்த காலத்தின்போது, இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில்  சர்ச்சைக்குள்ளான ஊழல் மோசடிகள் குறித்தும் இந்த அதிகாரிகளுடன் அமைச்சர் இங்கு விரிவாக ஆராய்ந்தார். இது தொடர்பில்  விரிவான மட்டத்தில் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.
   
இந்தக்  கலந்துரையாடலின்போது, ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் முன்னேற்ற அறிக்கையொன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அமைச்சருடன் இலங்கையில் பணியாற்றுவதற்கு ஐ.சீ.சீ. ஊழல் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார். இதேவேளை, எதிர்காலத் திட்டங்கள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு, ஐ.சீ.சீ. தலைவரைச் சந்திப்பதற்கும் அமைச்சர் எதிர்பார்த்துள்ளார்.

Post a Comment

0 Comments