Ticker

6/recent/ticker-posts

கோத்தாவுடன் கைகோர்த்த உவைஸ் ஹாஜியார்

எலிய (வெளிச்சம்) அமைப்பின் பொதுகூட்டம் கடந்த ஞாயிறு  (29.10.2017) அன்று  கண்டி ஒக்ரே ஹோட்டலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ   தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புகெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் உவைஸ், முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் சத்தாரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும், மத குருமார்களும், புத்தி ஜீவிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்து  கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், கண்டி மாவட்ட முஸ்லிம்கள் சார்பான  பிரதிநிதியாகக் அல் ஹாஜ் உவைஸ் அவர்களுக்கு   அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  
இந்நிகழ்வில் கோத்தபாய ராஜபக்ஷ   உரையாற்றுகையில்,
புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே எலிய அமைப்பினை உருவாக்கினோம். இந்த அமைப்பு இனவாத அமைப்பு அல்ல. அரசியலமைப்பு தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதே எமது பிரதான காரியமாகும். இந்த அமைப்பில் இனவாதிகள் இல்லை. பயங்கரவாதம் இருக்கும்போது யுத்தத்தினால் புலிகளை அழிக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூறி செயற்பட்ட அதே தரப்பினர்தான் தற்போது புதிய அரசிய லமைப்பை உருவாக்க முன்னிலை வகித்து செயற்படுகின்றனர்.

புலிகளுக்காக சர்வ தேச நாடுகளுக்கு பல்வேறு தகவல்களை வழங்கிய புலம்பெயர் அமைப்பினர் தானே அரசியலமைப்பினை தயாரிக்க வேண்டும் என்பதில் முன்னிலையில் உள்ளனர். இவர் களின் நோக்கம் என்ன? நாட்டை பிளவுபடுத்துவதாகும்.

இதன்காரணமாகவே இதன் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்துவதற்காக எலிய அமைப்பினை தோற்றுவித்தேன். இந்த நாட்டில் வாழும் மூவின மக்களுக்கு இந்த நாட்டில் கெளரவமான பிரஜையாக வாழும் உரிமை உள்ளது. அதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள் எதிர்க்கவும் மாட்டார்கள்.
அவ்வாறு எதிர்த் ததும் இல்லை. தமிழ் மக்களை பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கிற்கு அப்பால் பெரும்பான்மையினர் தெற்கில்தான் வாழ்கின்றனர்.
எனினும் அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றனர். 1983 ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதன்போது ஏற்பட்ட அவலங் களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இந்த கலவரத்திற்கு 13 இராணுவ வீரர்களின் கொலை காரணமானது. எனினும் அப்போது முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கில் இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்ட போது எமது மக்கள் அவ்வாறு செயற்படவில்லை.

அத்துடன் இந்த பகுதிகளில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்வி பயில்வதற்கும் பல்கலைக்கழகம் சென்று மருத்துவர். சட்டத்தரணியாக செயற்படுவதற்கும் சிங்கள மக்களினால் இடையூறு உள்ளதா?
நான் எட்டு வருடங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தேன். எனக்கு எதிராக முன்னெடுக்கப் பட்ட வழக்கொன்றின் போது எனது எதிர் தரப்பு சட்டத்தரணியாக தமிழ் தேசியக் கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே வாதமிட்டார்.
எனவே இவ்வாறான தொழிலை செய்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை நாம் வழங்கியுள்ளோம். அத்துடன் 30 வருட கால யுத்தத்தினால் வடக்கில் இருந்து வந்த பலர் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் வந்து குடியேறினர். இதன் போது சிங்கள மக்கள் எதிர்த்தனரா? எனவே நாட்டில் மூவின மக்களும் ஒற்று மையாக இருந்து வாழ முடியும்.

நான் கூறியவை அதற்கு  சிறந்த எடுத்துக்காட்டாகும். அத்துடன் தற்போது விடுதலைப் புலி களும் இல்லை. ஆகவே நல்லிணக்கத்தை சிறப்பான முறையில் ஏற்படுத்த முடியும். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் இருக்கும் போது ஏன் புதிய அரசியல மைப்பினைக் கொண்டுவர துடிக்கின்றீர்கள்? எனினும் வடக்கு, கிழக்கில் வாழும் மக்க ளுக்கு பிரச்சினை உள்ளது என்பதனை நான் ஒப்புக்கொள்கின்றேன். அந்த பிரச்சினை வேறு. அங்குள்ள மக்கள் யுத்தத்தினால் மிகவும் துயரம் கொண்டனர். யுத்தம் கார ணமாக அபிவிருத்தி ஏற்பட முடியாமல் போனது. எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாம் வடக்கு பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்து அபிவிருத்தியை துரிதப் படுத்தினோம். மின்வசதி, வீதி நிர்மாணம், ரயில்வே போக்குவரத்து வசதிகளை வழங் கினோம்.

அதனையும் விட ஜனநாயகத்தை வழங்கினோம். எனினும் இனவாதத்தை கக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இதனை பற்றி பேசுவது கிடையாது. யுத்தத்தின் பின்னர் வடக்கு பகுதியில் ஆயுத புழக்கம் இருப்பதனை தெரிந்தி ருந்தும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீளப்பெற்று வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தினோம். இந்த தேர்தலை நடத்த வேண்டாம் என பல தரப்பினர் கோரிய போதும் நாம் தேர் தலை நடத்தினோம். அத்துடன் யுத்தத்தின் போது சுவீகரித்த காணிகள் அனைத்தையும் நாம் மக்களுக்கு வழங்கினோம். அதுமாத் திரமின்றி அந்த பகுதியின் அபிவிருத்திக் காக தனியார் நிறுவனங்களிடம் தொழிற் சாலைகளை ஆரம்பிக்குமாறு கோரினோம். எனினும் எவரும் முன்வரவில்லை.
என் றாலும் ஒரிரு நிறுவனங்களை எம்மால் ஆரம்பிக்க முடிந்தது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன் றத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை ஒற்றையாட்சி நாடு கிடையாது. இது பல்லினத்தவர்களின் நாடாகும் என கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒற்றையாட்சியை நீக்கமாட்டோம் என கூறுகின்றனர். அப்படியாயின் ஒற்றை யாட்சிக்குரிய பிரதான அம்சங்களை நீக்கக் கூடாது. அதாவது ஆளுநரின் அதிகாரம் தொடர்ந்து ஆளுநரின் வசமே இருக்க வேண்டும். மேலும் பாராளுமன்றத்திற்கே சட்டவாக்க அதிகாரம் இருக்க வேண்டும். மாகாண சபைகளுக்கு அது சென்றால் அது நாடு பிளவுபடுவதற்கு காரணமாகிவிடும். மேலும் காணி உரிமை தொடர்ந்து மத்திய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். இந்த காணி அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்கினால் அதனை ஒற்றையாட்சியாக எடுக்கலாம்.

ஒற்றையாட்சிக்குரிய பிரதான அம்சங் களான இந்த மூன்று காரணிகள் நீக்கப்படாது என்பதனை அர சாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்குறித்த பிரதான விடயங்களை மாற்றம் செய்யமாட் டோம் என அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும். ஒற்றையாட்சி வார்த் தையில் மாத்திரம் இருந் தால் போதாது. அரசி யலமைப்பு உட்கட்ட மைப்பில் தெளிவாக கூற வேண்டும். நல் லிணக்கத்தின் பெயரினால் புதிய அரசியல மைப்புக்கான காரணங்களை முன்னெடுக்க வேண்டாம். நாட்டை பிளவுபடுத்தி நல்லி ணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதற்கு இந்தியா-பாகிஸ்தான் உதாரணமாகும். இந்த நாட்டில் வாழும் மக்கள் ஒற்றுமை யாக வாழ்வதனை தடுப்பது எமது நோக்கம் இல்லை.
சிறு தரப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அது பாரதூரமாக அமையும். மொழிதான் தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அதனை தீர்க்க முடியும். இதற்கு அரசியலமைப்பு பதில் கிடையாது.

எனவே புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற் கான பணிகளை உடன்நிறுத்துங்கள். வட க்கு, கிழக்கு பகுதிகளில் பிரச்சினை இருந் தால் அபிவிருத்தியை தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். தனியார் முதலீடுகள் மூலம் பதில் வழங்குங்கள். வடக்கிலுள்ள மக்கள் பல துயரங்களை எதிர்நோக்குகின்றனர். எனினும் வடக்கு மாகாண சபை மக்களின் பொதுவான பிரச்சி னைகளை பற்றி பேசுவது கிடையாது. அரசி யலமைப்பின் மூலம் அதிகாரத்தை பெறுவது பற்றிதான் இவர்கள் பேசுகின்றனர். சாதா ரண மனிதர்களின் பிரச்சினைகளை பேசு வதில்லை. தமிழ் தலைவர்களின் தமது இய லாமையை எடுத்துக்காட்டுகின்றனர்.

நாம் பாரிய அபிவிருத்தியை செய்தோம். எனவே இந்த அரசாங்கமும் வடக்கிற்கான அபிவி ருத்திகளை தொடர வேண்டும் என்றார்.
இன்னும் பல விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப் பட்டதாக அல் ஹாஜ் உவைஸ் ஹாஜியார் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments