Ticker

6/recent/ticker-posts

அணுஆயுத ஒழிப்பு அமைப்பான ஐகேன்னுக்கு ICAN அமைதிக்கான நோபல் பரிசு

அணுஆயுத ஒழிப்புக்காக போராடி வரும்  ஐகேன் அமைப்புக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில்  நோபல் பரிசில் மிக முக்கியத்துவமான நோபல் பரிசு ஐகேன் என்ற அமைப்புக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐகேன் அமைப்பு 2007-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது.
 கடந்த பத்து வருடங்களாக ஆணுஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், அணுஆயுத சோதனை நடத்துவதற்கும் ஐகேன் அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
மேலும் அமெரிக்கா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளிடம் அணு ஆயுத உற்பத்தியை குறைத்ததில் ஐகேன் அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்கது,
சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அணுஆயுதங்களை தடை செய்வதற்கான தொடர் முயற்சியிலும் ஐகேன் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
அணுஆயுத போரினால் ஏற்படும் விளைவுகளையும், துயரங்களையும் ஐகேன் அமைப்பு தொடர் பிரச்சாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
அணுஆயுதங்களை கொண்டு போர் பதற்றத்தை அமெரிக்காவும், வடகொரியாவும் உருவாக்கி வரும் நிலையில் அணுஆயுதத்திற்கு எதிராக போராடி வரும் ஐகேன் அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments