Ticker

6/recent/ticker-posts

ரோகின்யா அடக்குமுறையை தடுப்பீர்! ஆங் சானுக்கு கனடா பிரதமர் கோரிக்கை

டோரோண்டோ, செப்.14- மியன்மாரில் ரோகின்யா முஸ்லீம்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்படி மியன்மார் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு கனடா பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனால், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகின்யா மக்கள் வங்காள தேசத்திற்கும், இந்தியாவிற்கும் தப்பியோடி உள்ளனர். 
இந்நிலையில், மியான்மாரின் தலைவராகவும், அரசின் ஆலோசகராகவும் உள்ள ஆங் சான் சூச்சியிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ நேற்று தொலைபேசி மூலம் பேசியுள்ளார். 
அப்போது, ரோகின்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மியான்மாரின் தார்மீக மற்றும் அரசியல் தலைவராக உள்ள ஆங் சான் சூச்சியிடம், ராக்கேன் மாநிலத்தில் ரோகின்யா மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து தனது கவலையையும் ஜஸ்டின் வெளிப்படுத்தியுள்ளார். ஆங் சான் சூச்சி கனடா நாட்டின் சிறப்பு குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments