Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பங்களிப்பு அளப்பரியது - கலாநிதி ரூமி ஹாசிம்

(எம்.எஸ்.ஸாகிர்)
முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பங்களிப்பு அளப்பரியது என இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரூமி ஹாசிம் தெரிவித்தார்.

இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதி ஹஸீப் மரிக்காரின் வேண்டுகோளின் பேரில் தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி ஐ. எல்.எம். மஷுர் மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 54 ஆவது  ஊடகக் கருத்தரங்கில் பங்குபற்றியோருக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவர் இதனைத் தெரிவித்தார்.

பேருவளை கல்வி வலயத்தின் 10 பாடசாலைகளில் உயர் வகுப்பில் படிக்கும் முஸ்லிம் - தமிழ் மாணவர்களுக்காக ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம் என்ற தொனிப் பொருளிலானா கருத்தரங்கு மற்றும் பாடசாலைக் கல்வியை முடித்தவர்களுக்கு ஊடகத்துறை அறிமுகம் பற்றிய கருத்தரங்கு ஆகிய இரண்டு கருத்தரங்குகளிலும் பங்குபற்றியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவதுநல்லாட்சி அரசினைப் பதவிக்கு கொண்டு வருவதற்கு ஊடக சமூகம் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது.
முஸ்லிம் சமூகம் ஊடகத்தில் போதிய ஆர்வம் காட்டாதிருப்பது கவலைக்குரியது. ஊடகம் இன்று சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. முஸ்லிம்கள் இதனை உணர்ந்து முஸ்லிம்களால் நடத்தப்படும் ஊடகங்களுக்கு உதவ வேண்டும்.
தர்கா நகர் கல்வியியற் கல்லூரியின் அவல நிலை பற்றி தலைவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தர்கா நகர் சாஹிரா கல்லூரியின் அதிபர்
திருமதி நுஸ்கி அஸ்கர் தனதுரையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நடத்தப்படுகின்ற இந்த செயலமர்வு எமது மாணவர்களுக்கு அரிதானதொரு சந்தர்ப்பமாகும். இப்படியான சந்தர்ப்பங்கள் நாங்கள் படிக்கும் காலத்தில் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய மாணவச் செல்வங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு இவ் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அதாவது ஏற்கனவே ஊடகத்துறையில் ஆர்வமாக இருக்கின்ற மாணவர்களுக்கு தங்களை வளர்த்துக் கொள்ளவும்இவ்வாறான ஊடகக் கருத்தரங்கு மூலமாகவும்  தங்களது வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ளவும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் சந்தர்ப்பமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. அந்தவகையில் ஊடகம் சம்பந்தமான கருத்தரங்கு அழைப்பு எங்கள் பாடசாலைக்கு கிடைத்தவுடன் முதலில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.  எமது பாடசாலையில் மிகவும் திறமை வாய்ந்த மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மிகவும் சிறந்த வாய்ப்பாக நான் இதனைப் பயன்படுத்திக் கொடுக்க வேண்டும் என உடனே தீர்மானித்து மாணவர்கள் மற்றும் அதற்கான பொறுப்பாசிரியர்களையும் அழைத்து ஊடகக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன். 

நாங்கள் அனைவரும் சவால்கள் நிறைந்தஅச்சுறுத்தல் உள்ள கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சவால்களை நாங்கள் வெற்றி கொள்வதற்குஎமது இலக்குகளை சரியான முறையில் அடையாளம் கண்டுகொள்வதின் மூலமாகவே வெற்றி கொள்ள முடியும்.  ஊடகத்துறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு சிலரே எம்முடைய சமூகத்தில் ஊடகவியலாளர்களாக இருக்கின்றார்கள். எனவே இருக்கின்ற குறைபாட்டை நீக்கி எதிர்காலத்திலாவது நம்பிக்கைககுரிய செயற்பாடுகள் நடைபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழு மற்றும் உற்சாகமாகக் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும் என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதேச சபைத் தலைவரும் இந்நாள் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான ஏ.ஆர். பதியுதீன் தனதுரையில்,
என்னைப் பொறுத்தவரையிலும் நான் அறிந்த வகையிலும் எமது பிள்ளைகள் பத்திரிகை வாசிப்பதுமிகவும் குறைவாக இருக்கின்றது. இன்று சமூக வலைத்தளம்தான் மிகவும் பயங்கரமான ஓர் ஆயுதம். அதனை நன்மைக்கும் பயன்படுத்தலாம்தீமையான விடயங்களுக்கும் பயன்படுத்தலாம். இந்த நிகழ்வில் ஊடகம் தொடர்பான மிகச் சிறந்த தரவுகளைத் வளவாளர்கள் தந்தார்கள். அதேபோன்று எமது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை விரும்பிய தொலைக்காட்சியிலும் பார்க்க முடியும். ஆனால் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பதும் மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றது. இந்த நாட்டிலேஉலகத்திலே என்ன நடக்கின்றதுஎமது சமூகத்துக்கு என்ன நடக்கின்றது போன்ற செய்திகளை பத்திரிகை வாசிப்பதன் மூலமாகத்தான் நாம் அறிந்து தெரிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் இன்று பயிற்சி பெற்ற இந்த பாசறையின் மூலம் எதிர் காலத்திலே ஒரு சிறந்த ஊடகவியலாளராக வரவேண்டும் என்பதுதான் எனது பேராவா. என்றார்.

அல் - ஹம்ரா வித்தியாலய அதிபர்
முஹம்மத் நள்ரி தனதுரையில்,
உலகலாவிய ரீதியிலே தமது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இவ்வாறான கருத்தரங்குகள் அமைகின்றன. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளோடு இணைந்து புத்தகப் படிப்பில் மாத்திரம் காலத்தைக் கடத்தாமல் தாம் பெற்ற அறிவை சமூகத்திலே எந்த அளவு செயற்படுத்தவேண்டும். நாம் எவ்வாறு சமூகத்தோடு இணைந்து செயற்படுத்தலாம் என்ற  துறை சார்ந்த நிபுணர்களின் அறிவுகளை இவ்வாறான நிகழ்வுகளின் மூலமாகப் பெற்றிருக்கின்றீர்கள்.  
எனவே பெற்ற இந்த அறிவை நல்ல முறையிலே வாழ்கையில் பயன்படுத்தி மென் மேலும் முன்னேற்ற கரமான பாதையிலே செல்லுவதற்கு வல்ல நாயகன் துணை புரிய வேண்டும் என்று பிராத்திக்கின்றேன். என்றார்.

தர்கா நகர் கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதி மௌலவி எம். ஆர்.எம். சில்மி தனதுரையில்
இந்த ஊடகத்தின் தொடர்பு இன்றைய கால கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. இன்று சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் இந்த ஊடகத்தின் தொடர்பிலிருந்து விலகிச் சென்றிருப்பதன் காரணமாக சமூகம் பின்னடைந்த நிலையில்துக்ககரமான செய்திகளை கேட்கக் கூடிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம். காரணம் ஊடகத் தொடர்புகள் முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியம். ஊடகம் என்பது இஸ்லாத்தில மிகவும் தேவையான ஒன்று. நபி (ஸல்) மற்றும் ஏனைய நபிமார்கள் இந்த ஊடகச் சேவையைச் செய்வதற்காகத்தான் இந்த உலகுக்கு வருகை தந்தார்கள். அவர்கள் தூதவராக வருகை தந்தார்கள் என்றால் அவர்கள் தொடர்பை ஏற்படுத்துகின்ற ஒன்றுதான் தூதுத்துவம். இறைவனுடைய செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்கான,ஒரு ஊடகராகத்தான் சமூகமளித்தார்கள்.

உலகமயமான ஓர் அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்தொழிநுட்ப சவால்களை இன்று எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே இவ்வாறான சவால்களில் இருந்து மீள வேண்டுமானால் ஊடகத்தின் தேவை முஸ்லிம்களுக்கு மிக முக்கியம். அதுவும் மாணவ சமூகத்துக்கு மிக மிக முக்கியம். என்று கூறினார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் யூ.எல். யாகூப்மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முஹம்மத்நவமணி ஆசிரியர் பீட சிரேஷ்ட உறுப்பினர் கலைவாதி கலீல்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி ஆசிரியர் ஜுனைத் எம். ஹாரிஸ்,  நொலேஜ் பொக்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ். அஷ்கர்கான் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

பல அமர்வுகளாக இடம்பெற்ற இக்கருத்தரங்கின் ஒவ்வோர் அமர்வுகளுக்கும் லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளின் ஆலோசகர் எம். ஏ.எம். நிலாம்முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம். இஸட். அஹ்மத் முனவ்வர்ஸ்ரீலங்கா மீடியா போர பதில் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்வில் ஊடகவியலாளர்களான அஸ்ரப் ஏ. சமத்நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஸாகிர் உட்பட கல்விமான்கள்உலமாக்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஹிஸாம் சுஹைல் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

Post a Comment

0 Comments