Ticker

6/recent/ticker-posts

இனவாதிகளை பாதுகாக்கும் மறைமுக திட்டத்தோடு; தொடர்ந்தும் செயற்பட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு நான் ஒருபோதும் தயங்கப்போவதில்லை – முஜீபுர் றஹ்மான்

'சகல வழக்குகளிலும் இருந்தும் ஞானசார தேரர் விடுதலை' என்ற செய்தி சிங்கள இனவாதிகளை திருப்திபடுத்துவதற்காகவும், உற்சாகமூட்டுவதற்காகவும் 'திவயின' பத்திரிகை வடிவமைத்த விசமச் செய்தியாகும். என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.

இஸ்லாம் மதத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை திட்டமிடப்பட்ட குற்றங்களை தவிர்க்கும் பொலிஸ் பிரிவு ழுசபயnணைநன ஊசiஅந னுiஎளைழைn  நீதிமன்றிலிருந்து வாபஸ் வாங்கியதாக செய்தியொன்று வெளிவந்திருக்கிறது. 

ஞானசார தேரருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், அஸாத்சாலி உட்பட மற்றும் பலர் தமது முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளுக்கான சட்ட உதவி  ஏற்பாடுகளை சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களின் ஆர்ஆர்ரி சுசுவு அமைப்பே ஏற்பாடு செய்திருந்தது. இந்த முறைப்பாடுகளின் பிரதிபலனாகவே பல நாட்களாக தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார். 

நல்லாட்சி அரசாங்கத்தின் மறைமுக உதவியினால் ஞானசார தேரர் ஒரே நாளில் மூன்று நீதிமன்றங்களினால் வியக்கத்தக்க முறையில் பிணையில் விடுவிக்கவும் பட்டார். இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடுகளை கேள்விக்குறியாக்கிய இந்த நிகழ்வுகள் அப்போதைய நீதியமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்ஷவின் கபடத்தனமான செயற்பாடுதான் என்ற விடயம் வெளியாவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.

இன்று திவயின செய்தி ஊடகத்திலும் ஏனைய ஒருசில சிங்கள இணையதளங்களிலும் வெளியான 'சகல வழக்குகளிலும் இருந்தும் ஞானசார தேரர் விடுதலை' என்ற செய்தி முற்றிலும் திரிபு படுத்தப்பட்ட பொய்யான செய்தியாகும் என இந்த வழக்கைத் தொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார். 

ஞானசார தேரர் மீது தான்; தொடுத்த வழக்கை பொலிஸாரால் எவ்வகையிலும் வாபஸ் வாங்க முடியாது என்று கூறிய அவர், இந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிவதற்கு திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகே அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதாகவும், ஞானசாரதேரரை சகல வழக்குகளிலிருந்தும் விடுவிக்கும் வேண்டுகோளை தனது பிரிவு ஒருபோதும் விடுக்கவில்லையென்றும் அப்படி விடுவிப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென்றும் அவர் கூறியதாகவும், நேற்றைய தினம் வாபஸ் பெறப்பட்ட வழக்கு பொதுபலசேனாவினால் ஞானசாரதேரருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் இந்த வழக்கை மட்டுமே போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால்;  திட்டமிடப்பட்ட குற்றங்கள் தவிர்ப்பு பொலிஸ் பிரிவினால் வாபஸ் பெற்றுக கொள்ளப்பட்டதாக குறித்த பிரிவின் பணிப்பாளர் அறிவித்ததாக முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார். 

மேற்குறித்த திவயின் பத்திரிகை பிரசுரித்த திரிபு படுத்தப்பட்ட பொய்யான இந்தச் செய்தியை பல தமிழ் இணையதளங்கள் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார். ஒரு சிங்கள இணையதளம் தனது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக பொய்யாக செய்தி வெளியிட்டிருப்பதையும் முஜீபுர்றஹ்மான் சுட்டிக்காட்டினார். 

இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட உதவிகளையும், உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் ஆர்ஆர்ரி அமைப்பின் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களிடம் இதுபற்றி கேட்டபோது தமது அமைப்பினால் ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்ட எந்த வழக்கும் நேற்று விசாரணைக்கு வரவில்லையென்றும் அப்படி தாங்களால் தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குவதற்கு பொலிஸாருக்கோ வேறு யாருக்குமோ எந்தவித அதிகாரமும் இல்லையென்றும் உறுதியாக கூறினார்.

இந்த செய்தி தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த முஜீபுர் றஹ்மான், 
''நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்று வரும் இனவாத நிகழ்வுகளை அவதானிக்கும் போது, இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா? என நாங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையிலே ஞானசார தேரர் போன்ற இனவாதிகள் மீது நாங்கள் தொடுத்த வழக்குகளை நாங்களே வாபஸ் பெற்றதாக கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்தியா? என்றும் கேள்வி எழுப்பினார்.  

''இந்நாட்டில் இனவாதத்தைக் கிளப்பி இனங்களுக்கிடையே முறுகல் நிலையை உருவாக்கி வரும் காட்டுமிராண்டித் தனமாக செயற்படும் கூட்டத்தினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டுமென்பதே என்பதே எங்களது உறுதியான கோரிக்கையாகும்'' என்றும்; அவர் கூறினார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக  மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரோடு தான் பலமுறை விவாதித்துள்ளதாகவும், நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முஸ்லிம்களின் விடயத்தில் பாராமுகமாக இருந்துகொண்டு இனவாதிகளை பாதுகாக்கும் மறைமுக திட்டததோடு; தொடர்ந்தும் செயற்பட்டால் பல போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட  இந்த நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு தான் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்றும் கூறிய முஜீபுர் றஹ்மான், இது அரசாங்கத்திற்கு தன்னால் விடுக்கப்பட்ட ஓர் அபாய சமிக்ஞை என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments