Ticker

6/recent/ticker-posts

மியன்மார் பெண்கள் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சித் தக­வலை வெளி­யிட்­டது ஐ.நா.

பங்­ளா­தேஷின் கொக்ஸ் பஸா­ருக்கு புதி­தாக வந்து சேர்ந்­துள்ள ரோஹிங்­யர்கள் மீது நிகழ்ந்த பாலியல் மற்றும் பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றைகள் தொடர்­பான தக­வல்கள் அதிர்ச்­சி­யி­னையும் கவ­லை­யி­னையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் புலம்­பெ­யர்­வுக்­கான முக­வரகத் தின் தலைவர் தெரி­வித்­துள்ளார். 

மியன்­மாரில் இடம்­பெற்ற இரா­ணுவ நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து தப்பி வந்த ரோஹிங்ய அக­திகள் இரா­ணு­வத்­தினர் பெண்கள் மற்றும் சிறு­மிகள் மீது வன்­பு­ணர்வில் ஈடு­பட்­டனர் என குற்­றம்­சாட்­டி­ய­தாக  புலம்­பெ­யர்­வுக்­கான சர்­வ­தேச அமைப்பின் பணிப்­பாளர் நாயகம் வில்­லியம் லாஸி ஸ்விங் நேற்­று­முன்­தினம் தெரி­வித்தார்.
இந்தக் குற்­றச்­சாட்டை மறுத்­துள்ள மியன்மார் அர­சாங்கம், அது தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளுக்கு அனு­மதி மறுத்­துள்­ளது. 
புலம்­பெ­யர்­வுக்­கான சர்­வ­தேச அமைப்­பினைச் சேர்ந்த வைத்­தி­யர்கள் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பாலியல் வன்­கொ­டு­மை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட டசின் கணக்­கான ரோஹிங்யா பெண்­க­ளுக்கு சிகிச்சை அளித்­துள்­ளனர். ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை அதை­த­விட அதிகம் என முக­வ­ரக அறிக்­கை­யொன்று தெரி­வின்­றது. 
ஸ்திர­மான சூழல் தற்­போது காணப்­பட்­ட­போ­திலும் இந்த அதிர்ச்­சி­தரும் வன்­மு­றை­களும் துஷ்­பி­ர­யோ­கங்­களும் அறிக்­கை­யி­டப்­ப­ட­வில்லை என ஸ்விங் தெரி­வித்தார்.
கடந்த மாதம் மாத்­திரம் 160,000 ரோஹிங்ய பெண்­களும் இளம் சிறு­மி­களும் பங்­க­ளா­தேஷை வந்­த­டைந்­துள்­ள­தாக மதிப்­பீடு செய்­யப்­பட்­டள்­ளது. 
அல்-­ஜெ­ஸீ­ரா­விடம் பேசிய இரு சகோ­த­ரிகள் மியன்மார் படை­யி­னரால் தாம் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­தனர். 'இரா­ணு­வத்­தினர் எம்மை சித்­தி­ர­வதை செய்­தனர்', என தெரி­வித்த 25 வய­தான மினாரா, 'எமது பெற்­றோரை அவர்கள் கொன்று விட்­டனர். எங்களை காட்டுக்குள் கொண்டு சென்றனர். எங்களை தரையில் தள்ளிவிட்டனர்' எனவும் அவர் குறிப்பிட்டார். 
அவரது சகோதரியான 22 வயதான அஸீஸா இரு ஆண்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு சுயநினைவை இழந்தார். 
ஏனைய அகதிகளால் காப்பற்றப்பட்ட இவ்விரு சகோதரிகளும் பங்களாதேஷுக்கு வருவதற்காக ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments