Ticker

6/recent/ticker-posts

ரோஹிங்யா இன அழிப்பின் பின்னணியில் இந்தியாவே உள்ளது.

சிங்கள மொழி மூலம் - கீர்த்தி ரத்நாயக . 
தமிழில் – ஏ எம் எம் முஸம்மில் ( BA Hons) பதுளை.
மியன்மாரின் ராக்கையின் கடல்பரப்பின் எண்ணை மற்றும் கேஸ் வளத்தை மோப்பம் பிடித்த அமேரிக்கா ரோஹிங்கிய முஸ்லிம் இன அழிப்பின் முன் மயான அமைதி காக்கின்றது. ரோஹிங்யாவை போல் யேமனில் இன அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அனால் அதனை உலக நாடுகள் கண்டு கொள்ளவில்லை. வழமையாக அமெரிக்க கொள்கைகளை ஆதரிக்கும் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில், யேமன் விடயத்தில் கைகொள்ளும் அதே மௌன அங்கீகாரத்தையே ரோஹிங்யா விடயத்திலும் அப்ளை பண்ணியுள்ளது. 

பிரசித்தி பெற்ற யூத வர்த்தக முதலைகளான ஜார்ஜ் சோரோஸ் மற்றும் அவரின் அடிவருடியாக கருதப் படும் டெனிஸ் ஒப்ரின் போன்றவர்கள் உள்ளிட்ட யூதர்களின் எட்டு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகள் மியன்மாரில் முதலீடு செய்யப் பட்டுள்ளது. தெற்காசியாவின் பெரிய அண்ணன் என்று தன்னை கருதி கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இந்த விடயத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் திடீர் கவலையின் மூல காரணமே சீனாவையும் மியன்மாரையும் இணைத்திருக்கும் எண்ணை குழாயே அன்றி இந்த ரோகின்யா அவலம் அல்ல. ரோகின்யா அவலத்தின் சூத்திர தாரியே இந்தியா தான். மியன்மாரின் அரச அங்கீகாரம் பெற்ற பௌத்த தீவிரவாத அமைப்பான அசின் விராதுவின் 969 இயக்கத்தின் பின்னணியில் இஸ்ராயீல் மொசாட் அமைப்பின் செயற்பாடுகள் உள்ளன.


உலக அளவில் உற்பத்தி செய்யப் படும் ஹேரோயின் போதைப் பொறுள் உற்பத்தியில் 25% அதிகமான ஹேரோயின் போதை பொருள்களை உற்பத்தி செய்வது இந்த பௌத்த காவியுடையில் தன்னை மறைத்துக் கொண்டுள்ள மியன்மார் நாடுதான். பௌத்த காவியுடையில் தன்னை மறைத்துக் கொண்டு அரங்கேற்றப் படும் மியன்மாரின் செயற்பாடுகள் உலக பௌத்த மக்களின் அபிமானத்தை சிதைத்து அவமானப் படுத்தியுள்ளது. காவி தரித்து பஞ்சசீலம் பேணுபவர்களாக தன்னை காட்டிக் கொள்பவர்கள் கள்வர்கள் கயவர்கள் என்றால் , அதில் எந்த பிரயோசனமும் இல்லை.
மியன்மாரின் தற்போதைய நிலவரங்களை புரிந்துகொள்ள வேண்டுமாயின் அதன் வரலாற்றை சற்று தெரிந்து கொள்ள வேண்டும். மியன்மாரின் இனவாத தீ பற்றவைக்கப் பட்டது ராக்கைன் மாநிலத்தில் தான். அதன் தலைநகரமான “ கியின் பியூ” துறைமுக வளம் கொண்டதொரு வர்த்தக நகரமாகும் . இங்கு 1.3 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். ராக்கைன் மாநில முஸ்லிம்கள் ஒரு வர்த்தக சமூகமாவார்கள் . அடிக்கடி வங்கால தேச எல்லை பகுதிகளை கடந்து வருபவர்களும் இவர்களுள் உள்ளார்கள். வங்காளதேச எல்லைபிரதேசங்களில் ( ரோஹிங்யாவில்) மட்டுமின்றி மியன்மாரின் ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 

குறிப்பாக ரோஹின்ஞாவிலிருந்து “ கியின் பியூ” வர்த்தக நகரம் வரையுள்ள அண்டிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் பரந்து வாழ்கின்றார்கள். ராக்கையின் பிரதேசமானது பௌத்த அடையாளத்தை கொண்டதாக இருந்தாலும் அது வரலாற்று ரீதியாக முஸ்லிம் வர்த்தக சமூகத்துடன் ஒன்றிணைந்து கட்டியெழுப்பப் பட்டதொரு சமூக கட்டமைப்பையுடைய செழுமை மிக்க நகரமாகவே காணப் பட்டது. மேலும் “ ராக்கையின் ” வரலாற்று ரீதியாக தொண்டு தொட்டு சுதந்திரமாக இயங்கிவரும் ஒரு தனிநாடாகவே கருதப் பட்டு வந்த பூமிப் பிரதேசமாகும். அசோக மன்னனின் பௌத்த பேரரசுக்கு மாத்திரமல்ல, செங்கிஸ்கானின் இஸ்லாமிய பேரரசுக்கும் இவர்கள் கட்டுப் பட்டவர்களாக இருக்க வில்லை. கி பி 1206-1526 வரையிலான 320 வருட காலம் ஹிந்துஸ்தானை ஆக்கிரமித்திருந்த “ முஹம்மத் காஸ்னாவித்”த்தின் ஆட்சியின் கீழ் இந்த “ ராக்கையின் ” பிரதேசம் இருந்துள்ளது. அதன் பிறகு 1526-1858 வரையிலான காலப் பகுதி மோகல் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்துள்ளது. இஸ்லாமிய ஆட்சிப் பரம்பல் ஆசியாவின் எல்லைகளிலெல்லாம் வியாபித்திருந்த மிகப் பிரபலமான கால கட்டத்தில் கூட “ ராக்கையின் ” பிரதேசம் எந்த வித வெளிநாட்டு ஆதிக்கத்திற்கும் உட்படாது தனி சுதந்திர நாடாகவே இருந்துள்ளது .

“ ராக்கையின் ” பிரதேசத்திற்கு முதன் முதலில் கைவத்த நாடு பர்மா எனும் மியன்மார் நாடாகும். 1784ல் இவர்கள் “ ராக்கையின் ” பிரதேசத்தை கைப்பரினார்கள். 1824 ல் பர்மா எனப்படும் மியன்மார் பிரித்தானிய காலநித்துவ நாடாகியது.
1824 – 1948 வரையான காலப்பகுதி பர்மா உட்பட தெற்காசிய நாடுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஆட்பட்டிருந்தது . குறிப்பிட்ட அந்த காலப் பகுதியில் அவை திட்டவட்ட நாடுகளாக கருதப் படவில்லை. 1947ம் ஆண்டுக்கு பின்பே நாடுகளின் எல்லைகள் நிர்ணயிக்கப் பட்டு தனி நாடுகளாக பிரிக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டன. இந்திய உபகண்டத்தின் நாடுகளின் எல்லைகளை நிர்ணயிப்பதில் பிரதான சூத்திரதாரியாக ஜவஹர்லால் நேருவே செயற்பட்டார். முஹம்மத் அலி ஜின்னா ஜவஹர்லால் நேருவின் பெருந்திட்டத்தில்
( இந்திய பாகிஸ்தான் எல்லை பிரிப்பு ) கைப்பிள்ளையாக செயட்பட்டவராவார். குறிப்பிட்ட அந்த காலத்தில் இந்திய ஆளுநரான மவுன்ட் பேட்டனின் மனைவியான எட்வினாவுக்கும் நேருவுக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்ததெனும் விடயம் ஒரு பகிரங்க இரகசியமாகும். இது முற்றிலும் உண்மையானதென்பதை மவுன்ட் பேட்டன் ஆளுநரின் இளைய மகளான பமேலா மவுண்ட் பேட்டன் அண்மையில் ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்த தொடர்பு காரணமாகவே ஆங்கிலேய ஆளுனரை நேருவால் தன இஷ்டப் படி சூட்சுமமாக வழிநடத்த முடிந்தது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் எனும் வகையில் நாடுகள் பிரிக்கப் பட்டது பிரித்தானியாவின் தேவைகளுக்கு ஏற்ப என்பதை விட நேருவின் திட்டத்திற்கு ஏற்றவகியில் என்பதே சரியான கூற்றாகும் . நேருவின் நரித்தனமான திட்டம் யாதெனில் 80% வீதமான ஹிந்துக்களை கொண்டதொரு இந்திய தேசத்தை உருவாக்குவதாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தை இந்தியாவிலிருந்து வேறு பிரித்து துண்டாடியது இதனடிப்படையிலாகும். இந்தியாவின் மேற்கு பகுதிகளை பெருவாரியாக பிரித்து “ பாகிஸ்தான் ” ஆகவும் கிழக்கு இந்திய பெருவாரியான பிரதேசங்களை பிரித்து வங்காள தேசமாகவும் இந்தியாவிலிருந்து துண்டாடப்பட்டு பிரிக்கப் பட்ட உண்மையான வரலாற்றுப் பின்னணி இதுவாகும். 

ரோஹிங்யா உட்பட்ட ராக்கையின் முஸ்லிம் வலயத்தை பர்ம ராஜியத்தோடு இணைத்து மியன்மார் எனும் நாட்டை உருவாக்கினார்கள். முஸ்லிம்களின் யுனிடியை (கூட்டை) இவ்வாறுதான் நான்காக தகர்த்தார்கள். ஒருவேளை இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஐக்கிய இந்தியாவை உருவாக்கி இருந்தால் இன்று இந்தியா ஒரு முஸ்லிம் பெரும்பான்மையை கொண்டதொரு நாடாக இருந்திருக்கும். சுதந்திரம் பெற்றுக் கொடுக்கும் போது ராக்கையின் பிரதேசம் சம்பந்தமாக எடுக்கப் பட்டிருக்கவேண்டிய சிறந்த தீர்வு பௌத்தர்கள் மற்றும் முஸ்லீம்கள் சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்த ராக்கையின் பிரதேசத்தை தனியானதொரு சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தால் இன்றைய நிலைமைகள் தலைகீழாக மாறி இருந்திருக்கும்.
ஆனால் நேரு – அலி ஜின்னா கூட்டு செய்த வரலாற்று துரோகம் யாதெனில் ரோஹிங்யா உள்ளிட்ட ராக்கையின் பிரதேசத்தை மியன்மாருக்கு எழுதிக் கொடுத்ததாகும். முஸ்லிம்களின் கூட்டு ஒற்றுமையை சிதைக்க நேரு பாவித்த கோடரிகாம்பு அலி ஜின்னாவாகும். அவர் பதவி பட்டங்களுக்காக இங்கிலாந்துக்கு சென்று துர்நடத்தைகளுக்கு ஆளானதொரு கருப்பு கோட் காரராவார். சமூகத்தின் நாளைய இருப்பை விட அன்றாட தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிற்றின்பக் காரராவார். ஆனாலும் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பிரதாநீயாகவும் இருந்தார்.
ஜின்னாவின் தகப்பனார் குஜராத்தின் பிரபலமான வர்த்தக செல்வந்தராக இருந்தார். ஜின்னாவின் பாட்டனார் ஒரு ஹிந்து மதத்தவராவார். பிற்காலத்தில் அவர் ஷியா மதத்தை தழுவினார். தொண்டு தொட்டு முஸ்லிம்களும் பௌத்தர்களும் ஒற்றுமையுடன் கூட்டிணைந்து வாழ்ந்து வந்த ராக்கையின் பிரதேசத்தை மியன்மார் மிலிடரி ஆட்சிக்கு தாரை வார்த்த நாளிலிருந்து இனப் பிரச்சினையின் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. 

1982 ம் ஆண்டு, வரலாற்றில் மிக முக்கியமானதொரு மைல் கல்லாக கருதப் படுகின்றது. மியன்மார் மிலிடரி ஜுண்டாக்களால் பிரகடனப் படுத்தப் பட்ட விசேடமானதொரு சட்ட மூலத்தின் மூலம் ரோஹிங்யா முஸ்லிம்களின் குடியுரிமைக்கு எதிராக பல கட்டாய வரையறைகள் நிர்ணயிக்கப் பட்டு அவர்களின் சுதந்திரத் தன்மைக்கு வேட்டு வைக்கப் பட்டது. இம்மக்களுக்கு மத்தியில் இதன்மூலம் கூட்டிணைவுக்கு பதிலாக பிரிவினை வாதம் திணிக்கப் பட்டது. பாதிக்கப் பட்ட முஸ்லிம் சமூகத்திற்குள் இலகு ரக ஆயுதங்களை கொண்ட புரட்சிக் குழுக்கள் தோன்றின. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆயுதக் குழுக்களின் அனுசரணை இவர்களுக்கு கிடைத்தது. ஆனாலும் இவற்றின் தாக்கம் இரத்த வெள்ளம் ஓடும் அளவிற்கு பாரதூரமானதாக இருக்க வில்லை. 

2011ம் ஆண்டு அண்டைய அகலக்கண் திறக்கும் வகையில் மியன்மாரில் பாரியளவிலான அபிவிருத்தி திட்ட மொன்றை சீனா முன்னெடுத்தது. அதில் ரோஹிங்யா பிரதேசத்தை அண்டிய கடல் பரப்பில் கனிய எண்ணை அகழ்வு ,மற்றும் “ கியின் பியூ” துறைமுக நகரையும் சீனாவையும் ஒன்றிணைக்கும் எண்ணை குழாய் இணைப்பு திட்டங்கள் சம்பந்தமாக மியன்மாருக்கும் சீனாவுக்கும் இடையில் பிரபலமானதொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கி மீ 771 நீளமான இந்த எண்ணை குழாயை பொருத்துவதின் மூலமாக மத்திய கிழக்கு பிரதேசத்திலிருந்து சீனாவை நோக்கி வரும் எண்ணை கப்பல்கள் இனிமேலும் மலாக்கா சமுத்திரத்தை சுற்றிவரும் அவசியம் இல்லாமல் போனது. அத்துடன் சுமார் 1000 கி மீ தூரம் வரை கடல் வழிப் பயணம் சுருங்கியது. டொலர் பெறுமதியில் அல்லாமல் யுவான் பெறுமதியில் ஈரானிலிருந்து எண்ணை கொள்வனவு செய்யும் திட்டமொன்றும் இதற்குள் அடங்கியிருந்தது.
அது சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பாரிய இடியாக இருந்தது. சீனாவின் புதிய முதலீட்டுத் திட்டம் சம்பந்தமாக இந்திய, சவூதி, அமெரிக்க கூட்டு கதிகலங்கியது. இதுவரைக்கும் தாலிபான் பாணியிலான உதவிகள் கிடைத்துவந்த இஸ்லாமிய போராளிகளுக்கு இந்திய ரோ அமைப்பின் உதவிகளும் கிடைக்க ஆரம்பித்தது. பல்வேறு பகுதிகளில் பிரிந்து போராடிவந்த போராட்டக் குழுக்களுக்கு சவூதி ஆதரவில் ஒன்றிணைந்து போராடும் சந்தர்ப்பம் கிட்டியது. அல் அர்சா (ARAGGAN ROHINGYA SALVATION ARMY – ARSA) வின் உதயம் இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது. அல் அர்சாவின் தாக்குதல் இலக்குகள் பெரும்பாலும்
பௌத்த மத நிலையங்களாக இருக்க வில்லை. மாறாக சீன மியன்மார் வர்த்தக மையங்களையே இவர்களின் தாக்குதல்களுக்குள்ளானது. ஆனாலும் ஊடகங்கள் இன முரண்பாட்டையே தூக்கிப் பிடித்தன. இவ்வுலகின் போதைபொருள் வியாபாரத்தின் பிரதான சூத்திரதாரிகளாக திரைமறைவில் இயங்குபவர்கள் பெரும்பாலும் இஸ்ரவேலர்களாகிய யூதர்களாகவே உள்ளார்கள். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பெரிய ஹெரோயின் போதைப்பொருள் வழங்குனர்கள் மியான்மர் நாட்டினராவர். குறிப்பிடத்தக்க இஸ்ரேல் நாட்டவர் மற்றும் யூத முதலீடுகள் மியன்மார் நாட்டில் செயற்பாட்டில் இயங்குகின்றது. வழமையாக இஸ்ரவேலர்கள் இரு தரப்பினருக்கும் ஆயுத விற்பனையில் ஈடுபடும் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள். அந்த வகையில் ஒருபக்கத்தில் தன் அமெரிக்க எஜமானனை சந்தோசப் படுத்த இந்திய ரோ வுடன் சேர்ந்து அல் அர்சாவுக்கு ஆதரவு தந்து வளர்த்ததுடன் மறுபக்கத்தில் அசின் விராத்துவின் பயங்கரவாத 969 இயக்கத்தின் “ ஐடியலோஜி ” யாகவும் செயற்பட்டார்கள். 

இந்த விடயத்தில் இலங்கையர்களான நாங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் யாதெனில் பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஹிந்து அடிப்படிவாதிகளின் “ அகண்ட பாரத” தேசப் படத்தின் பகடைக்காய்களாக ஆக்கப் பட்டுள்ளார்கள் என்பதையே. இந்த தருணத்தில் இலாங்கையர்களான எமது நிலைப்பாடாக இருக்க வேண்டியது ரோஹிங்யா விடயத்தில் சமூக வலைத்தளங்களின் ஊடாக குரோதத்தை வைராக்கியத்தை பரப்புவது அல்ல. ஆளில்லா வீட்டில் சட்டிபானைகள் நொறுக்குவது போன்று ஊர்வலம் செல்வதும், ஆர்பாட்டங்கள் செய்வதுமல்ல. நாம் இலங்கையர்கள் என்ற வகையில் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பதே எமது மனித நேய செயற்பாடாக உள்ளது. 

Post a Comment

0 Comments