Ticker

6/recent/ticker-posts

கஞ்சா பயிரிடும் இலங்கை இராணுவம்?

நாட்டில் யுத்தம் இல்லாததால், இராணுவ வீரர்களைக் கொண்டு கஞ்சா வளர்க்கும் முயற்சியை மேற்கொள்வதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு அவசியமான மூலிகை மருத்துவத்திற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் கஞ்சா மற்றும் அபின் என்பவற்றை வேறு நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமங்களின் அடிப்படையில், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
“கஞ்சா மற்றும் அபின் என்பன எமது தேசிய மூலிகை வைத்தியத்தின் முக்கிய மூலப்பொருட்களாகும்.
நான் பொறுப்பேற்கும் போது, அபின் இல்லாமையினால் பெருமளவிலான மூலிகை மருந்துகளை தயாரிக்க முடியாமல் போனது.
அபின் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுவதால் சுமார் நான்கு வருடங்களாக அது எமக்கு கிடைக்கவில்லை.
அதன்பின் நான் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு, இந்திய மற்றும் இலங்கை இந்திய தூதரகங்களின் ஊடாக அதிக சிமரத்தின் மத்தியில் எமக்கு தேவையான அபினை இலங்கைக்கு கொண்டுவந்தேன்.
அதேபோல் பொலிஸாரினால் கைப்பற்றபடுகின்ற கஞ்சா வழக்குகள் நிறைவடைந்து நான்கு வருடங்களின் பின் எங்களுக்கு கிடைப்பதால், அதிலுள்ள மருத்துவ குணங்கள் முற்றாக இல்லாமல் போய்விடுகின்றன.
இதனால் நாம், இராணுவத்தினரைப் பயன்படுத்தி கஞ்சாவை இலங்கையிலேயே பயிரிடுவதற்கு தீர்மானித்தோம். இதன்போது, எமது தேவைக்கு மாத்திரமன்றி வெளிநாடுகளின் தேவைக்கும் அதனை ஏற்றுமதி செய்ய முடியும்.
நாட்டில் யுத்தமில்லை. எனவே இராணுவத்தினரிடம் இதனை ஒப்படைத்து மிகவும் பாதுகாப்பான முறையில் பயிரிட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், எமது பாராம்பரிய மருத்துவத்தை காப்பாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments