Ticker

6/recent/ticker-posts

அசுத்தமான ஹோட்டல்களை சுற்றிவளைக்க விஷேடக் குழுக்கள்.

எதிர்வரும் பண்டிகை மற்றும் புதுவருட காலத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளை பரிசோதனை செய்யும் திட்டம் ஒன்றை கொழும்பு மாநகர முன்னெடுத்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பின் சகல பிரதேசங்களிலும் சுத்தமில்லாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் பரிசோதிக்பபடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகள் இருந்தால் பொதுமக்கள்
0112 676161 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments