Ticker

6/recent/ticker-posts

ஆபாச வீடியோ வெளியான விவகாரம்: கர்நாடக கலால் துறை அமைச்சர் ராஜினாமா - உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் ஹெச்.ஒய்.மேட்டி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவரை கைது செய்யக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், க‌லால் துறை அமைச்சராக ஹெச்.ஒய். மேட்டி (71) பதவி வகித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பெண் ஊழியர் ஒருவர் இவரிடம் பணியிட மாறுதல் தொடர்பாக உதவி கோரியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை தனியார் விடுதிக்கு வரழைத்த அமைச்சர், அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக செய்தி வெளியானது.


இந்நிலையில், அந்தப் பெண் ணுடன் அமைச்சர் தனியறையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஆதாரத்தை வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ராஜசேகர் வெளியிட்டார். சம்பந்தப்பட்ட‌ பெண், அமைச்சர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹெச்.ஒய்.மேட்டி உடனடியாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். அவர் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்ய முதல்வர் சித்தராமையா உத்தரவிட வேண்டும் என்றும் பெங்களூரு, மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்த ராஜசேகர், அமைச்சர் ஹெச்.ஒய். மேட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.

சக அமைச்சர்கள் மத்தியிலும், ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் அமைச்சர் மேட்டிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. நிலைமை மோசமானதால் நேற்று மெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சித்தரா மையா இசைவு தெரிவித்ததை யடுத்து, மேட்டியின் ராஜினா மாவை ஆளுநரும் ஏற்றுக் கொண்டார். மேலும் அவர் மீது உயர்மட்ட குழு விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவிட் டுள்ளார்.

இதுகுறித்து ஹெச்.ஒய்.மேட்டி கூறும்போது, “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த வீடியோ எனது வீட்டில்கூட எடுக்கப்பட்டிருக்கலாம். சம்பந்தப் பட்ட பெண் எனது உறவினர். பல ஆண்டுகளாக அவரை நன்கு அறிவேன். எனக்கும் அவருக்கும் இத்தகைய உறவு இல்லை. நான் குற்றமற்றவன் என நிரூபிப் பதற்காகவே எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.

Post a Comment

0 Comments