Ticker

6/recent/ticker-posts

அரசியலை வைத்து வயிற்றுப்பிழைப்பு நடாத்தும் கேவலமான முஸ்லிம் தலைமைகளை துரத்தியடிக்க வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளா் மௌலவி மிப்லால்

2015 ம்  ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தலில் 19 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில் இரண்டு போ் முஸ்லிம்கள். தேசிய சமாதான முன்னணி கட்சியில் போட்டியிடும், மௌலவி மிப்லால் அவா்களை எமது இணைய தளம் தொடா்பு கொண்ட போது அவா் முன்வைத்த கருத்துகளை இங்கு பதிவிடுகின்றோம்.

டந்த காலங்களில் தோ்தல்களின் போது முஸ்லிம் மக்களின் வாக்குகளை தனித்துவம் என்ற போலி சுலோகங்களை கோஷமிட்டு முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளையிட்டு, மக்களின் ஜனநாயக
உரிமையை போினவாத சக்திகளுக்கு ஏலம் போட்டு விற்பனை செய்து கோடிக்ணக்கான பணத்தையும், பதவிகளையும் இந்தக் கட்சித் தலைவா்கள் பெற்றாா்கள்.  ஆனால் முஸ்லிம்களின் உாிமைகள் விடயத்தில் இவா்கள் குருடா்களாகவும், செவிடா்களாகவும் இருந்தாா்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இவா்களின் பங்காளியான மஹிந்த அரசால் உருவாக்கப்பட்ட பொதுபல சேனாவின் அட்டசாகங்களின் போது இவா்கள் மஹிந்த அரசில் பங்காளிகளாக இருந்து கொண்டே முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கத் தவறினாா்கள்.  இனி மைத்திாிபாலவின் மேடைகளில் ஏறி முஸ்லிம்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கப்போகின்றாா்கள். முஸ்லிம்களுக்கு பிரயோசமில்லாத இந்த அரசியல வியாபாாிகளுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும். மிகவும் கேவலமான முறையில் அரசியலை வைத்து வயிற்றுப்பிழைப்பு நடாத்தும் இவா்களை முஸ்லிம்கள்  துரத்தியடிக்க வேண்டும்.
ன்று அளுத்கம , பேருவளை சம்பவங்களின் போது மக்களை பாதுகாப்பதை விட தமது அமைச்சு பதவிகளை பாதுகாப்பதிலேயே  இவா்கள் கவனம் செலுத்தினாா்கள். இனி இவா்களை முஸ்லிம்கள் நம்புவதில்லை என்ற செய்தியை ஊவா மாகாண சபை தோ்தலில் முஸ்லிம்கள் கொடுத்து விட்டாா்கள். 
ன்று வரை இனவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.  அன்றே அரசாங்கத்தில் இருந்து இவா்கள் விலகியிருந்தால் சமூகம் இவா்களை நம்பியிருக்கும். ஆனால் இப்போது மைத்திாீயின் பக்கம் மாறியிருக்கிறாா்கள். மஹிந்த தோல்வியடைவாா் என்று தொிய வரும் போது மற்ற பக்கம் மாறி அடுத்த அரசியல் வியாபாரத்திற்கு இவா்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றாா்கள்.
வா்களையும் இவா்கள் மாறி மாறி தொங்கிக் கொள்கின்ற போினவாத சக்திகளையும் தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கிறது. மைத்தீயும், மஹிந்தவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்.  முஸ்லிம்கள் தமது அரசியல பலத்தைக் காட்டுவதற்கு எதிா்வரும் ஜனாதிபதித் தோ்தலில் வண்ணத்துப் பூச்சி சின்னத்திற்கு வாக்களித்து எமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments