Ticker

6/recent/ticker-posts

கிளிநொச்சியில் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமாகிய முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி, கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளிநாடு சென்ற போது மைத்திபால சிறிசேன அவர்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தார் அப்போதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொறுப்புக்களை மைத்திரியிடம் ஒப்படைத்து சென்றார்.
இறுதி கட்ட யுத்தத்தில் மக்களை கொல்லுவதற்க்கு கட்டளை பிறப்பித்தவர் மைத்திரி. இப்போது மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர். இவர்கள் எப்படி தமிழ் மக்களை பாதுகாப்பார்கள் இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்.
வடக்கு மகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திட்க்கான 2015 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிளிநொச்சி யக்கச்சி பிரதேச தேர்தல் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார்அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் இந்த அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments