Ticker

6/recent/ticker-posts

தமிழ் கூட்டமைப்பின் அறிவிப்பு தமிழ்மக்களை ஏமாற்றும் செயல் - கோத்தாபய ராஜபக்ஷ

திரணி வேட்பாளர் மைத்திரியுடன் உடன்படிக்கை எதுவும் இல்லை எனக் கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் மைத்திரிக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரப் போகிறது? என பாதுகாப்பு செயலாளரும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

எதிரணி வேட்பாளர் மைத்திரியுடன் உடன்படிக்கை எதுவும் இல்லை என்றால் யுத்தம் முடிவடைந்த பின் வட பகுதி மற்றும் கிழக்கு பகுதியில் அனைத்து அபிவிருத்தி உட்பட சமாதானத்தை நிலைநாட்டி யதார்த்தபூர்வமாக செய்துகாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரித்திருக்கலாமே என்றும் அவர் தெரிவித்தார்.


பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் நேற்று அனைத்து தமிழ் அச்சு ஊடகங்களினதும் ஆசிரியர்களை சந்தித்து உரையாடினார்.

இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிப்பதாக சற்றுமுன் அறிவித்துள்ளது. ஆனால் எதுவித உடன்படிக்கையும் இல்லை என்றும் கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? என அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித உடன்படிக்கையும் இல்லை என மைத்திரி தெரிவித்திருப்பது ஏன்? தென் பகுதி மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவா? தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிக்கு ஏன் ஆதரவு வழங்குகிறது என்பது பற்றி இருதரப்பும் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இந்த கூட்டின் சரியான தெளிவான விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

Post a Comment

0 Comments