Ticker

6/recent/ticker-posts

கருத்து கணிப்பில் மைத்திரி முன்னணி: ராஜித சேனாரத்ன

டைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்து மஹரகம, ஹோமாகம, கடுவெல ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.


குறித்த மூன்று தேர்தல் தொகுதிகளிலும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மைத்திரிக்கு 48 வீத வாக்குகளும், மஹிந்தவிற்கு 37 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆளும் அரசாங்கத்தின் பிரதியமைச்சராகவிருந்த பைசர் முஸ்தபா எதிரணியில் இணைந்து கொண்டதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்…..

இலங்கையின் அரசியல் வரலாற்றைப் அவதானித்தால் அரசதரப்பிலிருந்து பலர் எதிர்க்கட்சிக்கு தாவிய சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ள சந்தர்ப்பங்களே உள்ளன. 1957 ஆம், 1964 ஆம், 1994 ஆம் ஆண்டுகளில் பலர் அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு தாவிய போது ஆளும் அரசாங்கங்கள் தோல்வியுற்றிருந்தன.

அப்போது அதிகபட்சமாக 14 பேரே கட்சித்தாவியிருந்தனர். ஆனால் இம்முறை 25 பேர் அதுவும் முதல்தரத்திலிருப்பவர்கள் ரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு வந்துள்ளனர். அதேபோல் இரண்டாம் தரத்திலிருக்கும் பலர் எம்பக்கம் வந்துள்ளனர்.

தற்போது மஹரகம, ஹோமாகம மற்றும் கடுவெல பகுதிகளில் மக்களிடம் கருத்து கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது மைத்திரிபால சிறிசேனவிற்கு 48 வீதமும், மஹிந்தவிற்கு 37 வீதமும் கிடைத்துள்ளன. அதைத்தவிர 15 வீதமான மக்கள் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

அரசாங்கத்தில் இருப்பவர்கள் அவர்களுடன் இணைந்து வேலை செய்பவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தபோதிலும், பலர் எதனையும் தெரிவிக்காது அமைதிகாத்தனர். இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் 23 வீதமான வாக்குகள் தற்போது எதிரணிக்கு சென்றுள்ளது.
 இந்த மூன்று தேர்தல் தொகுதிகளிலுமே இப்படியென்றால் ஏனைய பகுதியில் பார்க்கும் போது, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கின்றது. மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள இந்த அலை மேலும் தொடரும் என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments