Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் குடும்பத்தைப் பாதுகாக்க 200 பாதுகாப்பு படை வீரா்கள் ?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவிக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக 50 பேர் கொண்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்கு நான்கு பாதுகாப்பு படையினரே வழங்கப்பட்டுள்ளன. எனினும் தனக்கு இரண்டு பேரின் பாதுகாப்பு போதுமானது என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை அவர், தனது மகன் யோஷித்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 100 படையினரின் பாதுகாப்பையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு 50 படையினரின் பாதுகாப்பையும் வழங்கியுள்ளார்.

Post a Comment

1 Comments

  1. திருடர்களைப் பிடிப்பதற்காக படையணிகள் அமர்த்தப்பட்ட காலம் மாறி, திருடர்களுக்குப் பாதுகாப்பு வழங்கம் பாரம்பரியம் தோன்றியுள்ளதா என்ற சிந்தனை உருவாவதில் தவறில்லையே.

    முன்னாள் ஜனாதிபதிக்கு நடைமுறைச் சட்டத்திற்கமைய பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதான். ஆனால், முன்னாள் செயலாளர்களுக்கும் அப்படிக் கொடுப்பதற்கு இந்நாட்டு நடைமுறைச் சட்டம் இடமளிக்கின்றதா!

    அடுத்து, முன்னாள் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பை, அவர் வேறு யாருக்கும் கொடுக்க முடியுமா போன்ற வினாக்களும் எழவே செய்கின்றன!

    ReplyDelete